நயன்தாரா, தீபிகா படுகோனேவே ஓரங்கட்டியாச்சு.. ராக்கெட் வேகத்தில் எகிறிய ராஷ்மிகா மந்தனா சம்பளம்!

சென்னை: புஷ்பா முதல் பாகத்துக்கு வெறும் 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படத்துக்கே ராக்கெட் வேகத்தில் தனது சம்பளத்தை அதிகரித்திருக்கிறார். இந்நிலையில், அடுத்த படத்துக்கு அவருடைய சம்பளம் மேலும், உச்சத்தை தொட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர்களால் தான் படங்கள் பெரிதும் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டுகின்றன. அதன் காரணமாகவே ஹீரோக்களுக்கு பல நூறு கோடிகள் சம்பளமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஹீரோயின்கள் டூயட் பாடவும் ரொமான்ஸ் செய்யவும் மட்டுமே நடித்து வருவதால் அவர்களுக்கு பெரிதாக சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை.

rashmika mandanna rashmika mandanna salary pushpa 2 2

அதையும் தாண்டி ஒரு சில நடிகைகள் சோலோ பர்ஃபார்மன்ஸ் காட்டி வரும் நிலையில், 10 கோடி முதல் 15 கோடி வரை அதிகபட்சமாக இந்தியாவில் சம்பளம் வாங்கி வருகின்றனர். இந்நிலையில், ராஷ்மிகா மந்தானா தனது சம்பளத்தை அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

40 சதவீதம் ஷேர்: புஷ்பா 2 திரைப்படம் 6 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 5 நாட்கள் வரை 922 கோடி ரூபாயை புஷ்பா 2 திரைப்படம் பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்திய சினிமாவில் விஜய் மற்றும் ஷாருக்கானை பின்னுக்குத் தள்ளி அதிகபட்சமாக 300 கோடி ரூபாய் சம்பளத்தை அல்லு அர்ஜுன் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் மொத்த வசூலில் இருந்து 40 சதவீதம் பங்கு அல்லு அர்ஜுனுக்கு செல்லப் போவதாகவும் அதன் பின்னர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு 30 சதவீதமும் படத்தை இணைந்து தயாரித்த இயக்குநர் சுகுமாருக்கு 30 சதவிதமும் லாபத்தில் பங்கு என்கின்றனர். 2000 கோடி ரூபாய் வசூலை புஷ்பா 2 கடந்தால் அல்லு அர்ஜுன் சம்பளம் 500 கோடி வரை செல்லும் என்கின்றனர்.

rashmika mandanna rashmika mandanna salary pushpa 2 2

ராக்கெட் வேகத்தில் ராஷ்மிகா: இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் திரைப்படம் 900 கோடி வசூலை அடைந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் அதைவிட அதிக வசூல் வேட்டையை தற்போது நிகழ்த்தியுள்ளது. புஷ்பா முதல் பாகத்திற்கு ராஷ்மிகாவுக்கு சம்பளமாக 3 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், 2ம் பாகத்துக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் அதிகரித்து 12 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கூறுகின்றனர். லிப் லாக் முத்தக் காட்சிகள், படுகவர்ச்சியான ஆடைகளை அணிந்துக் கொண்டு குத்தாட்டம் போடுவது என எதற்குமே நோ சொல்லாமல் நடித்து வருவதால் அவரது மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்து வருவதாக கூறுகின்றனர்.

rashmika mandanna rashmika mandanna salary pushpa 2 2

நயன்தாரா, தீபிகா படுகோன்: நடிகை நயன்தாரா தென்னிந்தியாவிலேயே அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வரும் நிலையில், பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் கல்கி 2898 ஏடி படத்துக்கு 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் சம்பளம் புஷ்பா 2 படத்துக்கு பிறகு கிடுகிடுவென உயர்ந்த நிலையில், அடுத்த படத்துக்கு அவர் 15 கோடி முதல் 16 கோடி வரை சம்பளத்தை உயர்த்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனுஷின் குபேரா, சல்மான் கானின் சிக்கந்தர், தி கேர்ள் ஃபிரெண்ட் என ராஷ்மிகா மந்தனா கைவசம் பல படங்கள் உள்ளன. அனிமல் 2 மற்றும் புஷ்பா 3 படங்களுக்கு ராஷ்மிகா மந்தனாவின் சம்பளம் 20 கோடி வரை உயரும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X