Rashmika Mandanna: அனிமல் படத்துக்கு பிறகு சம்பளம் ஏறிடுச்சா?.. ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
மும்பை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் படத்திற்கு பல கோடி ரூபாயை சம்பளமாக வாங்கிய ராஷ்மிகா மந்தனா அந்த படத்திற்கு பிறகு மேலும், சில கோடிகளை உயர்த்தி விட்டதாக மீடியாக்களில் வெளியான தகவல்களை பார்த்து ராஷ்மிகா மந்தனா போட்டுள்ள கமெண்ட் இணையவாசிகளை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.
கிரிக் பார்ட்டி எனும் கன்னட படத்தில் கடந்த 2016-ல் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் அஞ்சனை புத்ரா, சமக் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பின்னர், டோலிவுட்டில் சலோ எனும் படத்தின் மூலம் அறிமுகமானவருக்கு 2018ல் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீத கோவிந்தம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா, மகேஷ் பாபுவுடன் சரிலேரு நீக்கெவ்வரு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

அனிமல் படத்தில் அப்படியொரு ரோல்: டோலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தில் அறிமுகமானார் அதன் பின்னர் கடந்த ஆண்டு தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்திருந்தார். தற்போது பாலிவுட்டில் அமிதாபச்சன், ரன்பீர் கபூர் அடுத்து விக்கி கவுஷல் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். அனிமல் படத்தில் ரன்பீர் கபூரின் ஆசை வார்த்தைகளை நம்பி வேறு ஒருவருடன் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அந்த திருமணத்தை நிறுத்தி விட்டு ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொள்கிறார். கீதாஞ்சலி எனும் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்த நடிப்புக்கு கடும் விமர்சனங்கள் கிளம்பின. ராஷ்மிகாவின் பிராவை பிடித்து இழுத்து அவரது முதுகில் காயம் வர வைக்கும் காட்சிகள் எல்லாம் ரொம்பவே மோசமான ஒன்று என்றும் எப்படி அதில் நடிக்க சம்மதித்தார். அது டொமஸ்டிக் வயலென்ஸ் என சர்ச்சைகள் வெடித்தன.
சந்தீப் ரெட்டி வங்கா: அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்க இயக்கத்தில் ரன்பிர் கபூர் நடித்துள்ள அனிமல் படம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. பிலிம்ஃபேர் விருதுகள் நிகழ்ச்சியில் 6 விருதுகளை அள்ளியது. ரன்பிர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா படு ரொமான்டிக்காக நடித்தது ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. படத்திற்கு எதிராக குவிந்த விமர்சனங்களுக்கு தொடர்ந்து தனது ஸ்டைலில் தக் லைஃப் பதில் அளித்து வருகிறார் சந்தீப் ரெட்டி வங்கா. சமீபத்தில், அமீர்கான் மனைவிக்கும் இவருக்கும் மோதல் என பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
ராஷ்மிகா சம்பளம்: வாரிசு படத்திற்கு சுமார் மூன்று கோடி ரூபாய் சம்பளமாக ராஷ்மிகா மந்தனா வாங்கியதாகவும் தற்போது அனிமல் படத்திற்காக அதிகபட்சமாக 4 கோடி ரூபாயை வாங்கி இருப்பதாகவும் மேலும், அடுத்த படத்திற்கு 4.5 கோடியாக தனது சம்பளத்தை ராஷ்மிகா மந்தனா உயர்த்தி விட்டார் என தகவல்கள் வெளியாகின. சில மீடியாக்களில் வெளியான இந்த செய்தியை பார்த்து விட்டு நடிகை ராஷ்மிகா மந்தனா போட்டுள்ள பதில் தான் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இதைப்பத்தி தயாரிப்பாளரிடம் பேசுறேன்: நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக புஷ்பா 2 மற்றும் இந்தியில் சத்திரபதி சாம்பாஜி மகராஜ் கதையில் உருவாகி வரும் சவ்வா படத்தில் விக்கி கவுஷலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில், தனது சம்பள விவகாரம் பற்றி வெளியான வதந்தியை பார்த்த ராஷ்மிகா மந்தனா ரொம்ப நல்ல விஷயம். இதைப்பற்றி என் தயாரிப்பாளரிடம் பேசுகிறேன். அவர் ஏன் சம்பளத்தை ஏத்துறன்னு கேட்டா, இந்த மீடியாக்காரர்கள் வெளியிட்டுள்ள செய்தியை காட்டுவேன் என பதில் அளித்துள்ளார். அப்படியே இந்த 100 கோடி, 200 கோடி உருட்டுக்கும் நடிகர்கள் ஏதாவது உண்மையை சொன்னால் நல்லா இருக்கும்.


Click it and Unblock the Notifications











