நேரலையில் ரசிகர் கேட்ட கேள்வி... கூலாக பதிலளித்த ராஷ்மிகா!

சென்னை : இன்கேம்... இன்கேம்...காவாலே என்ற பாடலில் க்யூட் ரியாக்ஷன்ஸை காட்டி ரசிகர்களின் மனதில் பசக்கென்று ஒட்டிக்கொண்டவர் ராஷ்மிகா மந்தானா...

ஆத்தாடி ... என்ன பொண்ணுடா என்று அவரை வர்ணிக்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நேஷ்னல் கிரஷ் நடிகையாகி விட்டார்.

நேரலையில் ரசிகர்களின் பல சுவாரசியமான கேள்விக்கு பதிலளித்துள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ராஷ்மிகா அறிமுகம்

ராஷ்மிகா அறிமுகம்

2016ம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் ராஷ்மிகா. இவர் நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல கன்னட திரைப்படங்களில் நடித்தார்.

கீதா கோவிந்தம்

கீதா கோவிந்தம்

இளம் ரசிகைகளின் கனவு நாயகனான விஜய் தேவர கொண்டாவுடன் இவர் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டு வருகிறார்.

நேரலையில்

நேரலையில்

நேஷ்னல் கிரஷ் நடிகையாகி மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் ராஷ்மிகா மந்தானா நேரலையில் தனது ரசிகர்களுடன் பேசினார். அப்போது பல சுவாரசியமான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர், எனக்கு உங்கள மாதிரியே ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க ஆசையா இருக்கு என்று கேட்டார். அதற்கு க்யூட்டாக நான் இங்கதானே இருக்கேன் என்று பதிலளித்தார். மேலும், தளபதி விஜய் அண்ணா பற்றி சொல்லுங்க என்று கேட்க உங்களுக்கே தெரியும்.. அனைவருக்குமே தெரியும் என மாஸாக ஒரு வரியில் பதிலளித்தார்.

தமிழில் பேசிய ராஷ்மிகா

தமிழில் பேசிய ராஷ்மிகா

மற்றொரு ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க விதவிதமான முகபாவனைகளை குறுகிய நேரத்தில் கொடுத்து அசத்திய ராஷ்மிகா, தமிழிலும் பேசி கலக்கினார். மேலும், அடுத்து எதாவது தமிழ் படத்தில் நடிக்கிறீங்களா என்ற கேள்விக்கு நிச்சயமா என்று பதிலளித்தார் மேலும், உங்களின் பர்ஸ்ட் க்ரஷ் பற்றி சொல்லுங்க என்ற கேள்விக்கு அய்யோ அப்படி எதுவும் இல்லை என்று கலகலப்பாக பேசினார்.

Recommended Video

சூப்பர்ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் |Actress Rashmika Mandanna Interview|Filmibeat Tamil
சுல்தான் படத்தில்

சுல்தான் படத்தில்

கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அங்கு அமிதாப் பச்சன், சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

20 மில்லியன் ஃபாலோவர்ஸ்

20 மில்லியன் ஃபாலோவர்ஸ்

ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்து இருக்கிறார். இதன்மூலம் காஜல் அகர்வால், சமந்தா, ரகுல் பிரீத் சிங், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X