Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
துல்கர் சல்மான் படத்தில் இணைந்த நடிகை ரஷ்மிகா மந்தனா!
சென்னை : நடிகர் துல்கர் சல்மான் மலையாளம் தொடர்ந்து தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் அறிமுகமாகி இருக்க இப்பொழுது புதிய திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகிறார்.
நகைச்சுவை மன்னன் நாகேஷ் பிறந்த நாள் இன்று… ஸ்பெஷல் ரவுண்டப் !
ஒரு ராணுவ வீரரின் காதல் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் துல்கர் சல்மான் ராணுவ வீரராக நடித்து வருகிறார்.

சிறப்பு தோற்றத்தில் ராஷ்மிகா மந்தனா
இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா முக்கியமான வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மலையாளத்தைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தமிழிலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2020 ஆம் ஆண்டு வெளியான மிகச் சிறந்த திரைப்படமாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கொண்டாடப்பட்டது . இப்பொழுது ஹே சனாமிகா என்ற படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார்.

லெப்டினன்ட் ராம்
ஹிந்தியில் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் துல்கர் சல்மான் இப்போது தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார். இயக்குனர் ஹனு ராக்வபுடி இயக்கத்தில் "லெப்டினன்ட் ராம்" என்ற புதிய படத்தில் துல்கர் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது . கதாநாயகியாக பாலிவுட் நடிகை மிருனால் தாகூர் நடிக்கிறார்.
Recommended Video

ராணுவ வீரரின் காதல் கதை
ராணுவத்தில் பணிபுரியும் துல்கர் சல்மான் போர் முடிந்து தன் காதலியைச் சந்திக்க வரும் கதையை வைத்து இந்தப் படம் எடுக்கப்படுகிறது. ஸ்வப்னா சினிமா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ராஷ்மிகா மந்தனா சிறப்பு தோற்றத்தில்
தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ராஷ்மிகா மந்தனா தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்போது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்திலும், ஹிந்தியில் மிஷன் மஞ்சு மற்றும் குட் பாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். "லெப்டினன்ட் ராம்" படத்திற்கு ஏற்கனவே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்க இப்பொழுது ராஷ்மிகா மந்தனா இணைந்திருப்பதால் இன்னும் அதிகமாகி உள்ளது.