ஐயோ ராமா என தலையில் அடித்துக் கொண்ட கனவுக்கன்னி.. பதறிப்போன ரசிகர்கள்!

ஹைதராபாத் : நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் திரைப்படம் படிப்புகள் முற்றிலும் முடிந்து மிக விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.

தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மட்டுமே நடித்து வந்த ரஷ்மிகா முதன் முறையாக தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுக மாக உள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் என எக்கச்சக்கமான ரசிகர்களை மிகக் குறைவான காலத்திலேயே பெற்ற நடிகை ரஷ்மிகா மந்தனா இப்பொழுது தலையில் அடித்துக்கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் பார்க்கும் ரசிகர்களை பதற வைத்துள்ளது.

அணு அணுவாக ரசித்த

அணு அணுவாக ரசித்த

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து ஜோடியாக நடித்த ரஷ்மிகா மந்தனாவை அணு அணுவாக ரசித்த ரசிகர்கள் இங்கே பல கோடி.

சிறந்த ரீல் ஜோடி

சிறந்த ரீல் ஜோடி

ஒவ்வொரு காட்சியிலும் இருவரின் கெமிஸ்ட்ரியும் படுபயங்கரமாக ஒர்கவுட் ஆகியிருந்த நிலையில் ரஷ்மிகா மந்தனா வின் சின்ன சின்ன கியூட்டான எக்ஸ்பிரஷன்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்த தோடு அந்த படம் மாபெரும் வெற்றி பெற்று இவர்கள் சிறந்த இளம் ரீல் ஜோடி என பலராலும் வர்ணிக்கப்பட்டது.

விமர்சன ரீதியாகவும்

விமர்சன ரீதியாகவும்

கீதா கோவிந்தம் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த ஜோடி இணைந்த டியர் காம்ரேட் திரைப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ஜோடிக்கு மேலும் ரசிகர் கூட்டம் பெருகியது.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ரஷ்மிகா மந்தனா மிகக்குறைந்த காலகட்டத்திலேயே இப்பொழுது உயரிய நிலையை எட்டியிருக்க தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் மகேஷ் பாபுவுடன் இணைந்து சரிலெரு நீகேவரு திரைப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் இப்பொழுது தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் இவரும் இணைந்துள்ளார்

தமிழில் அறிமுகமாக

தமிழில் அறிமுகமாக

இவ்வாறு நாளுக்கு நாள் ரஷ்மிகாவின் மார்க்கெட் ஏறிக்கொண்டே போக, தமிழ் ரசிகர்கள் இவரை எப்போது தமிழ் திரைப்படங்களில் பார்ப்போம் என ஏங்கிக்கொண்டிருக்க இப்பொழுது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் பிரம்மாண்டமாக உருவாகிவரும் சுல்தான் திரைப்படத்தில் முதல் முறையாக தமிழில் அறிமுகமாக உள்ளார்.

பதற வைத்துள்ளது

பதற வைத்துள்ளது

சுல்தான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மேலும் சுல்தான் திரைப்படத்தைத் தொடர்ந்து மற்றுமொரு முன்னணி நடிகருடன் ஜோடி போட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இப்போது ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை பதற வைத்துள்ளது.

தலையில் அடித்துக்கொண்டு

தலையில் அடித்துக்கொண்டு

எப்போதும் க்யூட்டான புகைப்படங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் ரஷ்மிகா மந்தனா இப்பொழுது "ஐயோ ராமா " என தலையில் அடித்துக்க்கொண்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பதறிப்போய் என்ன செல்லம் என்ன ஆச்சி என்று ராஷ்மிகாவை நலம் விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X