அப்படியே ராஷ்மிகா மந்தனாதான்.. அந்தப் பெண் அச்சு அசலா இருக்காங்களே.. ஏஐலாம் இல்லை பாஸ்
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா ஹீரோயினாக இப்போது கலக்கிவருகிறார். சில மாதங்களுக்கு முன்புதான் அவருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா மாதிரியே இருக்கும் பெண் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் பிரபலமான நடிகை. தெலுங்கில் அவர் நடிக்க தொடங்கியபோது சிலர் அவரை கிண்டலும் செய்தார்கள். நடிப்பு வரவில்லை; பார்ப்பதற்கு பெரிய அழகும் இல்லை என பலர் விமர்சித்தார்கள். அவரோ அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் உழைப்பதையும், திறமையை வளர்ப்பதையும் மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தார். அதன் பலனாக அடுத்தடுத்து ஹிட் படங்கள் அவருக்கு கிடைத்தன.

பான் இந்தியா ஹீரோயின்: தெலுங்கில் கலக்கிய அவர் தமிழிலும் நடித்தார். ஆனால் அவருக்கு சுல்தான் திரைப்படம் கைகொடுக்கவில்லை. மோசமான தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து தமிழுக்கு முழுக்கு போட்ட அவருக்கு ஹிந்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. ரன்பீர் கபூர், சல்மான் கான் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து நடித்து பான் இந்தியா ஹீரோயினாக மாறினார் அவர்.
விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம்: இதற்கிடையே கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்ததிலிருந்து இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது.அந்தக் காதலுக்கு இரண்டு வீட்டிலும் சம்மதம் கிடைத்ததால் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்துகொண்டார்கள். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருக்கும் நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாக அவர்களது திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் பிஸி: திருமணத்துக்கு பிறகும் நடிப்பதில் கவனத்தோடு இருக்கிறார் ராஷ்மிகா. அவர் நடிப்பதற்கும் விஜய் தேவரகொண்டாவும் அவரது தரப்பும் எந்தத் தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ராஷ்மிகா நடிப்பில் காக்டெயில் 2 திரைப்படம் வரவிருக்கிறது. திருமணம் செய்த பிறகு வரும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது அவருக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது ராஷ்மிகா மந்தனா சாயலில் ஒரு பெண் தொடர்பான வீடியோதான் அது.அப்படியே சிரிப்பு, முகம், பேசும் விதம் என அத்தனையும் ராஷ்மிகா மாதிரியே இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். இந்த லோ பட்ஜெட் ராஷ்மிகா மந்தனாவின் பெயர் சாபு என கூறப்படுகிறது. இவர்தான் இப்போது இணையத்தில் சென்சேஷனல்.


Click it and Unblock the Notifications
