பத்ரகாளி போல மாறிய ராஷ்மிகா மந்தனா.. எல்லாம் சலார் எஃபெக்ட்டா.. கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா காளி அம்மனை போல பல கைகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை தற்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். அப்படி போஸ் கொடுக்கவே வெட்கப்படும் ராஷ்மிகா மந்தனாவின் அழகை ரசித்து ரசிகர்கள் ஹார்ட்டீன்களையும் ஃபயர் எமோஜிக்களையும் போட்டு வருகின்றனர்.
கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தில் 2016ம் ஆண்டு அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் அஞ்சனை புத்ரா, சமக் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் தெலுங்கில் சலோ எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். 2018ல் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீத கோவிந்தம் படத்தில் நடித்ததன் பிறகு நேஷ்னல் கிரஷ் ஆனார்.

பாலிவுட்டில் பிசி: சாண்டல்வுட், டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டில் அமிதாபச்சன். ரன்பீர் கபூர் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா விரைவில் தனுஷுக்கு ஜோடியாக சேகர் கம்முலா படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எல்லை மீறிய நடிப்பு: சந்தீப் ரெட்டி வங்க இயக்கத்தில் ரன்பிர் கபூர் நடித்துள்ள அனிமல் படத்தில் ராஷ்மிகா மந்தனா ரன்பீர் கபுரூடன் சும்மா லிப் லாக் கிஸ்ஸை மானாவாரியாக அடித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு எல்லை மீறிய நடிப்பை ராஷ்மிகா மந்தனா அனிமல் படத்தில் அள்ளித் தெளித்தார். ஆனால், படம் வெளியான பின்னர் ராஷ்மிகா பெயர் டம்மி ஆக்கப்பட்டு திரிப்தி திம்ரி ரசிகர்கள் மத்தியில் பாப்புலரானார். அதற்கு காரணமே ஆடையே அணியாமல் ரன்பீர் கபூருடன் அவர் படுக்கையறையை காட்சியில் நடித்தது தான் என்கின்றனர்.
பத்ரகாளியாக மாறிய ராஷ்மிகா: நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோ மற்றும் வீடியோவில் அவருக்கு பல கைகள் உள்ளன. தனது நண்பர்கள் தன் பின்னால் இருந்துக் கொண்டு இப்படியொரு சேட்டையை செய்துள்ளனர். வளர்ந்து விட்டால் பெரிய மனுஷத்தனமாக நடந்து கொள்வார்கள் என சொல்வார்கள். ஆனால், நானும் என் நண்பர்களும் அப்படியே குழந்தைகளாக மாறி வருகிறோம் என பதிவிட்டு இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
சலார் எஃபெக்ட்: சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தை ராஷ்மிகா மந்தனா ஓடிடியில் பார்த்து இருப்பார் போல தெரிகிறது என்றும் அதில் பிரபாஸுக்கு பின்னாடி பல கத்திகள் வந்து காளி போல காட்சியளிப்பாரே அதே போல ராஷ்மிகா மந்தனாவும் ட்ரை செய்திருக்கிறார் என கலாய்த்து வருகின்றனர்.
வெட்கப்பட்டதெல்லாம் வேஸ்ட்டா?: அனிமல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கா பாலய்யா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனாவுக்கு விஜய் தேவரகொண்டா போன் செய்து பேப் என்றெல்லாம் பேசும் போது ராஷ்மிகா மந்தனாவின் கன்னம் சிவந்தது என ரன்பீர் கபூரே கமெண்ட் அடித்தார். ஆனால், சமீபத்தில் ராஷ்மிகா மந்தனாவை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாரா? என்கிற கேள்விக்கு அதிரடியாக விஜய் தேவரகொண்டா மறுப்பு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











