Rashmika Mandanna Net Worth: ராணி போல வாழும் ராஷ்மிகா மந்தனா.. சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: பெங்களூருவில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். 27வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கிர்க் பார்ட்டி எனும் கன்னட படத்தின் மூலம் பிரபலமானாலும் ராஷ்மிகாவை நேஷ்னல் கிரஷ் ஆக்கியது கீதா கோவிந்தம் திரைப்படம் தான்.

அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா, விஜய்யுடன் வாரிசு என வரிசையாக பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவின் சொகுசு வாழ்க்கை, சொத்து விபரம் மற்றும் ஒரு படத்துக்கு அவர் வாங்கும் சம்பளம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்..

27 வயது நேஷ்னல் கிரஷ்

27 வயது நேஷ்னல் கிரஷ்

1996ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி கர்நாடகாவில் உள்ள விரஜ்பேட் எனும் இடத்தில் பிறந்த ராஷ்மிகா மந்தனா சைக்காலஜி ஜர்னலிஸம் படிப்பில் பட்டம் பெற்ற நிலையில், மாடலிங்கில் இருந்த ஆர்வம் அவரை 2016ம் ஆண்டு ரக்‌ஷித் ஷெட்டியின் கிரிக் பார்ட்டி படத்தில் அறிமுகப்படுத்தியது. அந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படமாக அந்த படம் மாற ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் பார்வையும் ராஷ்மிகா மந்தனா மீது விழுந்தது.

பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக

பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக

2018ல் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாவில் ஃபாலோயர்களானார்கள். மகேஷ் பாபுவுடன் சரிலேரு நீக்கெவ்வரு, அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 1 மற்றும் 2, கார்த்தி உடன் சுல்தான், விஜய்யுடன் வாரிசு என அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். அமிதாப் பச்சனின் குட்பை படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

4 கோடி சம்பளம்

4 கோடி சம்பளம்

நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு மாதத்துக்கு 60 லட்சம் வரை சம்பளம் பெறுவதாகவும் ஆண்டுக்கு 8 கோடி வரை சம்பாதிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், புதிய படங்களில் நடிக்க 4 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார் ராஷ்மிகா மந்தனா என இண்டஸ்ட்ரியில் பேசிக் கொள்கின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

சொகுசு பங்களா

சொகுசு பங்களா

பெங்களூருவில் சுமார் 8 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவுக்கு சொந்தக்காரரான ராஷ்மிகா மந்தனா அண்மையில் மும்பையில் ஒரு மிகப்பெரிய குடியிருப்பில் ஒரு பெரிய ஃபிளாட் ஒன்றையும் சொந்தமாக வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனிமல் எனும் இந்தி படத்தில் நடித்து வரும் நிலையில், அங்கேயே தங்கி நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா என தகவல்கள் வெளியாகி உள்ளன.

லக்ஸரி கார்கள்

லக்ஸரி கார்கள்

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு அதிக விலை உயர்ந்த கார்களை வாங்கி கரேஜில் அடுக்கி வைக்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இல்லையாம். தற்போது அவரிடம் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ்-சி மற்றும் 40 லட்சம் மதிப்புள்ள ஆடி க்யூ3 கார்கள் மட்டுமே உள்ளதாக கூறுகின்றனர். சாதாரண டொயோட்டா கார் ஒன்றையும் ராஷ்மிகா மந்தனா அடிக்கடி பயன்படுத்தி வருகிறாராம்.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

2016ம் ஆண்டு நடிக்க வந்த ராஷ்மிகா மந்தனா சினிமா, விளம்பரங்கள் என ஓய்வே இல்லாமல் உழைத்ததன் பலனாக தற்போது அவரிடம் 8 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 65 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராணி போல ராயல் வாழ்க்கையை வாழ்ந்து வரும் ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X