Rashmika - அவர் நோ சொல்பவர் இல்லை.. விஜய் தேவரகொண்டாதான் எனக்கு ஆதரவு.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்
சென்னை: நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. அவரது நடிப்பில் கடைசியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம் வெளியானது. படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹிந்தியில் இன்னொரு ஹிட்டை பார்சல் செய்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரது அழகையும், நடிப்பையும் பார்த்த தெலுங்கு திரையுலகம் ராஷ்மிகாவை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். அதனையடுத்து டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் ராஷ்மிகா மந்தனாவுக்கென்ற ரசிகர்கள் குறையவில்லை. தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழில் ராஷ்மிகா: தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். விஜய்யுடன் நடித்திருப்பதால் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வரலாம் என கணக்கு போட்டார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
நேஷனல் க்ரஷ்: தமிழில் அவர் திணறினாலும் ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படி பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கிறார்கள். கடைசியாக அவர் அனிமல் படத்தில் நடித்தார். படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. ராஷ்மிகாவும் ஓவர் கவர்ச்சியாக நடித்திருந்தார்.
விஜய் தேவரகொண்டா: ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலில் இருப்பதாகவும், இருவரும் பலமுறை மாலத்தீவுக்கு ஒன்றாக சென்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து அதனை ராஷ்மிகா மந்தனா திட்டவட்டமாக மறுத்தார். இதற்கிடையே அவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்தார். இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாகவும் இருந்தது.
மீண்டும் வதந்தி:இந்த சூழலில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் ஒரே வீட்டில் வசிப்பதாக தகவல் பரவிய சூழலில் அவர்கள் இரண்டு பேருக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக புதிய பேச்சு ஒன்று கடந்த சில வாரங்களாகவே எழுந்திருந்தது. ஆனால் அதுகுறித்து ராஷ்மிகா மந்தனா வாய் திறக்காமல் இருக்கிறார். அதேசமயம் விஜய் தேவரகொண்டா அதனை சமீபத்தில் மறுத்தார்.
ராஷ்மிகா பேட்டி:இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அளித்த சமீபத்திய பேட்டியில், "என் வாழ்க்கையில் பெரும்பாலான ஆலோசனைகளை நான் விஜய் தேவரகொண்டாவின் ஆலோசனைகளை பெறுகிறேன். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் அவருடைய கருத்து எனக்கு தேவை. அவர் நோ சொல்லக்கூடிய ஆள் இல்லை. எல்லாவற்றுக்கும் எஸ் சொல்வார். அதேபோல் துல்லியமான கருத்தை சொல்வார். இது நல்லது, இது நல்லது இல்லை என்பதை நிதானமாக விளக்குவார். என் வாழ்நாளில் என்னை விஜய் தேவரகொண்டா போல் யாரும் ஆதரித்ததில்லை. அதனால்தான் நான் அவரை மதிக்கிறேன்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன ராஷ்மிகா மந்தனா விஜய் பற்றி இவ்வளவு உருகி பேசியிருக்கிறார். ஒருவேளை இருவருக்கும் காதல் என்பது உண்மைதானே என்று சந்தேகத்தை கிளப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











