Rashmika: விஜய் தேவரகொண்டா விவகாரம்.. உண்மை இதுதான்.. பளிச்சுனு பேசிய ராஷ்மிகா மந்தனா

சென்னை: நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் வரும் பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என்ற பேச்சுக்கள் பலமாக அடிபட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமீபத்திய பேட்டியில், இது தொடர்பாக மனம் திறந்து பேசி உள்ளார்.

ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலில் இருக்கிறார்கள். இருவரும் நிச்சயதார்த்தம் எல்லாம் செய்து கொண்டுவிட்டார்கள். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறவுள்ளது என்ற பேச்சுகள் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. இது தொடர்பாக இருவரும் இன்னும் மறுப்பும் தெரிவிக்கவில்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. இப்படி இருக்கையில் சமீபத்திய பேட்டியில் ராஷ்மிகா இதற்கு தெளிவான மற்றும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் பதிலைக் கொடுத்துள்ளார்.

Rashmika Mandanna Opens Truth About Vijay Devarakonda Relationship Status
Photo Credit:

உண்மை இதுதானாம்: அதாவது அந்த பேட்டியில், ராஷ்மிகா மந்தனா இந்த கேள்விக்கு ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையைச் சொல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் சுத்தலில் விடும் மறைமுக பதிலைச் சொல்லக் கூடாது என்ற சில கண்டிஷன்களோடுதான் நடிகர் விஜய் தேவரகொண்டா குறித்த கேள்வியை கேட்டார் தொகுப்பாளினி. அதற்கு பதில் அளிக்கையில், "கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த கிசுகிசு மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டே உள்ளது. ஆனால் இதில் உண்மை என்னவென்றால், இதை நான் எப்போது பேச வேண்டுமோ அப்போது பேசுவேன். நாங்கள் எப்போது பேச வேண்டுமோ அப்போது பேசுவோம்" என்று பதில் அளித்தார்.

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: அவரது இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. மேலும் சிலர் ராஷ்மிகா மந்தனாவும் சரி, விஜய் தேவரகொண்டாவும் சரி இந்த விஷயத்தில் தொடர்ந்து அமைதி காத்தே வருகிறார்களே. இது மட்டும் இல்லாமல், ராஷ்மிகா மந்தனா இந்த கேள்விக்கும் கூட நேரடி பதிலைக் கூறாமல், சுற்றலில்தான் விடுகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்வதை வெளி உலகத்திற்கு அறிவுக்கும் நாள் வந்தால் கூட, அது ரசிகர்களுக்கு உப்புச்சப்பில்லாத விஷயமாக மாறிவிடும் என்றும் பேசி வருகிறார்கள்.

Rashmika Mandanna Opens Truth About Vijay Devarakonda Relationship Status
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X