நயன்தாராவை ஓவர் டேக் செய்த ராஷ்மிகா மந்தனா.. பாலிவுட் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு
சென்னை: தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட் நோக்கி படையெடுக்கும் நடிகைகளின் வரத்து சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவருக்கும் இடையே பாலிவுட் மார்க்கெட்டில் ஒரு கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போது இந்த போட்டியில் நயன்தாராவை ஓவர் டேக் செய்து ராஷ்மிகா மந்தனா புதிய சாதனை படைத்திருப்பதுதான் ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்த நயன்தாரா, அடுத்ததாக பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் நடிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தத் திரைப்படத்திற்காக நடிகை நயன்தாராவிற்கு ரூபாய் 10 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கோலிவுட் மற்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் நயன்தாராவிற்கு, பாலிவுட்டிலும் இந்தத் தொகை ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகவே பார்க்கப்பட்டது.

ராஷ்மிகாவின் அசுர வளர்ச்சி: ஆனால், நயன்தாராவின் இந்த சாதனையை 'புஷ்பா ' படம் மூலம் பான்-இந்திய அளவில் பிரபலமான ராஷ்மிகா மந்தனா அசால்ட்டாக முறியடித்துள்ளார். பாலிவுட்டில் 'அனிமல்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, ராஷ்மிகாவின் மார்க்கெட் உச்சத்தைத் தொட்டுள்ளது. புஷ்பா 2 படமும் வசூலில் ஹிட் அடிக்க, ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கிறார் ராஷ்மிகா.
தற்போது பாலிவுட்டின் மிக எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமான "Cocktail 2" படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் திரைப்படத்திற்காக அவருக்கு ரூபாய் 15 கோடி சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாலிவுட் திரையுலகில் பரபரப்பு: சினிமாவில் சீனியரான நயன்தாரா, சல்மான் கான் படத்திற்கே 10 கோடி ரூபாய் வாங்கும் நிலையில், அவரை விட ஜூனியரான ராஷ்மிகா மந்தனா 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது பாலிவுட் தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பாலிவுட் முழுக்க "நயன்தாராவை முந்திய ராஷ்மிகா" என்ற பேச்சுதான் தீயாய் பரவி வருகிறது. நயன்தாராவை விட 5 கோடி ரூபாய் அதிகமாகப் பெற்று, பாலிவுட்டில் தற்போதைக்கு அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை என்ற பெருமையை ராஷ்மிகா மந்தனா தட்டிச் சென்றுள்ளார்.


Click it and Unblock the Notifications