பாலிவுட் படத்திற்காக வெறித்தனமாக பாக்ஸின் கற்றுக்கொள்ளும் ரஷ்மிகா மந்தனா!

மும்பை : நடிகை ரஷ்மிகா மந்தனா இப்பொழுது இந்திய அளவில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

கன்னடம் தெலுங்கு தமிழ் உள்ளிட்ட மொழிகளை தொடர்ந்து இவருக்கு இப்போது இந்தி பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

தமிழில் அறிமுகமான சுல்தான் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு முன்னணி நடிகரின் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் ரஷ்மிகா மந்தனா. இந்த நிலையில் இப்போது பாலிவுட் படத்திற்காக கடுமையாக பாக்சிங் பயிற்சி செய்து வரும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

பிரம்மாண்ட பொருட்செலவில்

பிரம்மாண்ட பொருட்செலவில்

தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் க்யூட்டான எக்ஸ்பிரஷன்களின் மூலம் ரசிகர்களை அடிமையாக்கிய நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு தமிழிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த இவர் தமிழில் எப்பொழுது நடிப்பார் என பலரும் ரசித்துக்கொண்டிருக்க கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகம் செய்யப்பட்டார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான சுல்தான் திரைப்படத்திலும் செம க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி தமிழில் அறிமுகமான ரஷ்மிகா மந்தனா இப்பொழுது மீண்டும் ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினியாக

ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினியாக

விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், மற்றும் டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினியாக மாற்ற பெரும் பங்கு வகித்தது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக மாறியுள்ள ரஷ்மிகா மந்தனாவுக்கு ஹிந்தியிலிருந்தும் பட வாய்ப்புகள் குவிகிறது.

Recommended Video

சூப்பர்ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் |Actress Rashmika Mandanna Interview|Filmibeat Tamil
அமிதாப்பச்சனுக்கு மகளாக

அமிதாப்பச்சனுக்கு மகளாக

அந்த வகையில் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா ஹீரோவாக நடிக்கும் மிஷன் மஞ்சு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அதைத் தொடர்ந்து அமிதாப்பச்சனுக்கு மகளாக குட்பை படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடிக்க அங்கேயே தனியாக வீடு ஒன்றையும் வாங்கி உள்ளார்.

வெறித்தனமாக பாக்சிங் பயிற்சி

வெறித்தனமாக பாக்சிங் பயிற்சி

தென்னிந்தியாவைப் போலவே பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டு இருக்கும் ரஷ்மிகா மந்தனா இப்பொழுது கவர்ச்சியிலும் தாறுமாறாக காட்டி வருகிறார். இந்த நிலையில் அடுத்தடுத்து நடிக்கும் பாலிவுட் படங்களுக்காக மிகத் தீவிரமாக சண்டை பயிற்சியும் கற்றுக்கொண்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது வெறித்தனமாக பாக்சிங் பயிற்சி செய்யும் வீடியோவை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X