ராஷ்மிகா மந்தனா கர்ப்பமா?.. நேஷனல் க்ரஷ் சொன்ன குட் நியூஸ்.. சினிமாவிலிருந்து ஓய்வா?
ஹைதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்தை முடித்துவிட்டு பிரமாண்டமாக ரிசப்ஷன் நடத்திவிட்டு; சில விருந்துகளில் பங்கேற்றார்கள். குட்டி ரசிகைக்கு விருந்தும் வைத்தார்கள். ஹனிமூன் எல்லாம் சென்ற ராஷ்மிகா; இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்பது குறித்த கேள்வியை ரசிகர்களிடையே எழுப்பியிருக்கிறது.
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தார்கள். அந்த சமயத்தில் ரக்ஷித் ஷெட்டியுடனான பிரேக் அப்பில் இருந்தார் ராஷ்மிகா. அப்போது விஜய் தேவரகொண்டா காட்டிய அக்கறை இரண்டு பேருக்கும் காதலாக மாறியது. வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த வருடத்தில் ஹைதராபாத்தில் இருக்கும் வீட்டில் வைத்து சிம்ப்பிளாக நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொண்டார்கள். அதில் உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

ஜோராக நடந்த திருமணம்: நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து பிரமாண்டமாக திருமணமும் செய்துகொண்டார்கள். அதிலும் திரைத்துறை பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. விரோஷ் கிரிக்கெட் லீக், கேண்டில் லைட் டின்னர், நீச்சல் குள பார்ட்டி, சங்கீத் என திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் களைகட்டின. அதனைத் தொடர்ந்து திருமணமும் நடந்தது. மன்னர் மாதிரி விஜய் தேவரகொண்டா தாலி கட்டும் இடத்துக்கு குதிரையில் வந்திறங்கினார்.
சூப்பர் ரிசப்ஷன்: திருமணத்தை முடித்துவிட்டு ஹைதராபாத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரிசப்ஷன் நடைபெற்றது. அதில் டோலிவுட், கோலிவுட், பாலிவுட், சாண்டல்வுட் பிரபலங்கள் எல்லாம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதற்கு பிறகு சில விருந்துகளில் கலந்துகொண்டார்கள். அதுமட்டுமின்றி தன்னை ஏன் திருமணத்துக்கு அழைக்கவில்லை என சிறுமி வீடியோ வெளியிட்டிருந்தார். அதனைப் பார்த்து உடனடியாக அந்த சிறுமியையும், அவரது குடும்பத்தினரையும் தங்கள் வீட்டுக்கு வரவழைத்து விருந்து வைத்தார்கள்.
ஹனிமூனில் பிஸி: அதுமட்டுமின்றி ஒரு இடத்தில் வைத்து எக்கச்சக்கமான ரசிகர்களுக்கும் விருந்து வைத்தார்கள். மேலும் அரசு பள்ளி மாணவ, மாணவியரின் கல்வி செலவையும் ஏற்றிருக்கிறார்கள். அவர்கள் இப்படி செய்ததை பார்த்து அனைவருமே பாராட்டினார்கள். இவை அனைத்தையும் முடித்துவிட்டு தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஹனிமூனுக்கு சென்றிருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகும் ராஷ்மிகா தொடர்ந்து நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அந்த மைண்ட் செட்டில்தான் இருந்தார்.
கர்ப்பமான ராஷ்மிகா?: ஆனால் இப்போது அவர் பிரேக் எடுக்கக்கூடிய சூழல் உருவாகிவிடுமோ என தோன்றுகிறது. அதாவது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், நாங்கள் மூன்று பேர் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதனைப் பார்த்த பலரும் திருமணமான ஒரே மாதத்தில் ராஷ்மிகா கர்ப்பமாகிவிட்டார். அதைத்தான் அவர் இப்படி சூசகமாக சொல்லியிருக்கிறார் என கமெண்ட்ஸ் செய்து வாழ்த்துகளை கூறிவருகிறார்கள். விஜய் தேவரகொண்டாவுக்கும் வாழ்த்துகள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications















