Rashmika Mandanna - வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி.. காதல் தோல்வியால் உச்சக்கட்ட விரக்தியில் ராஷ்மிகா மந்தனா?..

சென்னை: Rashmika Mandanna (ராஷ்மிகா மந்தனா) ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் பதிவால் அவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டுவிட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.

கன்னட சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கு சினிமா பலத்த வரவேற்பை கொடுத்தது. விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் அவரது நடிப்பும், அழகும் ரசிகர்களையும், திரைத்துறையினரையும் கவர அடுத்தடுத்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் அசுர வேகத்தில் வளர்ந்தார்.

Rashmika Mandanna Put Emotional Post in Her Instagram Page

புஷ்பா: தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனாவுக்கு புஷ்பா திரைப்படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி மெகா ஹிட்டானதால் ராஷ்மிகா மந்தனாவுக்கு மேலும் புகழ் வெளிச்சம் கிடைத்தது. அதேபோல் அந்தப் படத்தில் அவர் ஆடிய நடனமும் பெரும் வரவேற்பை பெற்றது.

நேஷனல் கிரஷ்: புஷ்பா படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ் என்ற பெயரை பெற்றார். அவரது எக்ஸ்பிரஷென்கள் பயங்கர க்யூட்டாக இருக்கிறது என்று ரசிகர்கள் சிலாகிக்க ஆரம்பித்தனர். சூழல் இப்படி இருக்க தமிழில் சுல்தான் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. விஜய்யுடன் நடித்த வாரிசு படமும் தோல்வியை சந்தித்ததால் கோலிவுட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருக்கிறார்.

அனிமல்: தமிழில் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டாலும் ஹிந்தியில் வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் அவர் கடைசியாக ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் நடித்திருக்கிறார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அந்தப் படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

கிளாமர் உச்சபட்சம்: இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கிளாமரில் உச்சம் சென்றிருக்கிறார். முத்த காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என அனைத்திலும் நடித்திருக்கிறார். இதற்காக அவர் 15 கோடி ரூபாய்வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாகவும் இரண்டு பேரும் வெளிநாட்டுக்கு அடிக்கடி பறப்பதாகவும் ஒரே வீட்டில் தங்குவதாகவும் கடந்த சில மாதங்களாகவே பேச்சு ஓடுகிறது.

விரக்தி பதிவு?: ஆனால் அதற்கு ராஷ்மிகா மந்தனா சில முறை மறுப்பு தெரிவிப்பதும் பிறகு அமைதி காப்பதும் வாடிக்கையானது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு அவர் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. அந்தப் பதிவில் அவர், "உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். எனது வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவை மனதில் வைத்துதான் ராஷ்மிகா மந்தனா இபப்டி ஒரு விரக்தியான பதிவை போட்டிருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்து அந்தப் பதிவை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X