Rashmika Mandanna: ராஷ்மிகா மந்தனாவோட குடும்பமா இது... இவ்ளோ க்யூட்டான தங்கச்சியும் இருக்காங்களா..?

சென்னை: டிசம்பர் மாதம் ரிலீஸான அனிமல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா துணிந்து சில காட்சிகளில் நடித்திருந்தார். இதன்மூலம் தற்போது பான் இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் ராஷ்மிகாவின் ஃபேமிலி போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ராஷ்மிகாவின் தங்கச்சியா இது
கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. முதல் மூன்று படங்கள் கன்னடத்தில் நடித்த அவர், அதன் பின்னர் தெலுங்கு, தமிழ் இப்போது இந்தி என பாலிவுட் நடிகையாக மாஸ் காட்டி வருகிறார். கீதா கோவிந்தம், தேவதாஸ், டியர் காம்ரேட், பீஷ்மா போன்ற படங்கள் தெலுங்கில் ராஷ்மிகாவுக்கு நல்ல சக்சஸ் கொடுத்தன.

 Rashmika Mandanna: Rashmika Mandannas family photo is trending on the social media

அல்லு அர்ஜுனுடன் நடித்திருந்த புஷ்பா படம் ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட்டை உச்சம் தொட வைத்தது. அதேபோல் தமிழில் கார்த்தியுடன் சுல்தான், விஜய் ஜோடியாக வாரிசு ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது தனுஷின் 51வது படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே இவரும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக செய்திகள் வலம் வருகின்றன.

இந்நிலையில் கடைசியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் மிகப் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இந்தியில் உருவான இந்தப் படம் பான் இந்தியா அளவில் பல மொழிகளில் வெளியானது. அனிமல் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியான ராஷ்மிகா மந்தனா சில கவர்ச்சியான காட்சிகளிலும் துணிச்சலாக நடித்திருந்தார். இதனால் தற்போது இந்தியிலும் ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட் உச்சம் தொட்டுள்ளது.

மேலும் பல முன்னணி ஹீரோக்களும் தங்களுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் ஃபேமிலி போட்டோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகாவிற்கு ஒரு தங்கை மட்டுமே உள்ளார். அவருக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையே 17 வயது வரை வித்தியாசம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

தற்போது வெளியான ராஷ்மிகாவின் ஃபேமிலி போட்டோவில், அவரது தங்கை சிறுமியாக இருப்பதை பார்க்க முடிகிறது. ராஷ்மிகாவின் தங்கை பெயர் ஷிமான் மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது. ராஷ்மிகாவை போலவே அவரது அம்மா, அப்பாவும் இளமையாக தோற்றம் அளிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X