Just In
- just now
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 45 min ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 1 hr ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 1 hr ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
தாய்–மகளுடன் பக்கத்து வீட்டு சிறுமியும் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்
- Sports
3 முக்கிய வீரர்கள்.. இதுதான் பிளான்.. நட்சத்திர ஆஸி. வீரருக்கு வலை வீசும் சிஎஸ்கே!
- Finance
தங்கம் விலை உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு ரூ.7000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா?
- Automobiles
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்?! க்ரெட்டாவின் ஆதிக்கத்தை உடைக்குமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கையில் கம்புடன் விடாமல் விரட்டிய பெண்.. மரமேறி மாங்காய் பறித்து வசமாக மாட்டிய பிரபல ஹீரோயின்!
சென்னை: தான் சின்ன வயதில் மாங்காய் பறித்து மாட்டிய கதையை, சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் பிரபல நடிகை.
கொரோனா வைரஸ் பாதிப்பால், லாக்டவுனை மத்திய மாநில அரசுகள் நீட்டித்துள்ளன.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு பலியாகிறவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
குட்டி ஸ்கர்ட்ல வொர்க் அவுட்.. அதுவும் என்ன மாதிரி பொஸிஷன்னு பாருங்க.. வைரலாகும் நடிகையின் போட்டோ!

கொரோனா வைரஸ்
இந்தியாவில், இதுவரை இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3029 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்த தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

ராஷ்மிகா மந்தனா
படப்பிடிப்புகள் இல்லை என்பதால் நடிகர், நடிகைகளும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். சில நடிகர், நடிகைகள், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்து தங்கள் நேரத்தை கழித்து வருகின்றனர். அதன்படி தெலுங்கு சினிமாவின் லக்கி ஹீரோயின் என சொல்லப்படும் ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

மாங்காய்கள்
அவரிடம் பலர் கேள்விகேட்டனர். ஒருவர் உங்களது சின்னவயதில் நடந்த ஜாலியான அனுபவங்களை கூறுங்களேன் என்று கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த ராஷ்மிகா கூறியதாவது: ஒரு முறை நானும் எனது தோழிகளும் டியூஷன் சென்று கொண்டிருந்தோம். வழியில் ஒரு மாமரம். மாங்காய்கள், கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்தன. பார்த்ததும் பறித்து சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

இறங்கி ஓடினேன்
வேகமாக மரத்தில் ஏறிவிட்டேன். பறித்துவிட்டு கீழே இறங்குவதற்குள் சத்தம் கேட்டு வீட்டுக்காரப் பெண், கையில் கம்புடன் வெளியே வந்துவிட்டார். நான் சிக்கிக் கொண்டேன். இருந்தாலும் வேகமாக கீழே குதித்து ஓடினேன். அவரும் விடவில்லை. தொடர்ந்து, திட்டியபடி எங்களை விரட்டிக் கொண்டே வந்தார். இது அந்த காலத்தில் எங்களுக்கு ஜாலியாக இருந்தது' என்று தெரிவித்துள்ளார்.

முதல் சினிமா
நீங்கள் பார்த்த முதல் சினிமா எது என்று ஒருவர் கேட்டதற்கு 'கில்லி' என்று கூறியுள்ளார் ராஷ்மிகா. 'அந்தப் படம் என்றுதான் நினைக்கிறேன். என் அப்பா அழைத்து சென்றார்' என்று கூறியுள்ளார். நடிகை ராஷ்மிகா, தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அல்லு அர்ஜுன்
கன்னட நடிகையான ராஷ்மிகா, தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற படத்தில் நடித்தார். இது மெகா ஹிட். அடுத்து, டியர் காம்ரேட் படத்தில் நடித்தார். இந்தப் படம் மூலம் தமிழுக்கும் வந்தார். மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த சரிலேரு நீக்கெவரு, நிதினுடன் நடித்த பீஷ்மா படங்கள் ஹிட்டாக, தெலுங்கில் லக்கி ஹீரோயின் ஆனார். இப்போது அல்லு அர்ஜூன் ஜோடியாக, புஷ்பா படத்தில் நடிக்க இருக்கிறார்.