ரஷ்மிகா மந்தனா நடிக்கும் "ஆடவாலு மீகு ஜோஹர்லு" படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது!

சென்னை : ரஷ்மிகா மந்தனா இப்பொழுது தென்னிந்தியா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் வெற்றிகரமாக கால் தடத்தை பதித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை குவித்து வருகிறார்.

தமிழில் சுல்தான் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகத்தை கொடுத்த இவர் இப்பொழுது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜயதசமியை முன்னிட்டு நடிகர் சர்வானந்த் உடன் இணைந்து நடித்துள்ள ஆடவாலு மீகு ஜோஹர்லு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

 கலவையான விமர்சனங்களை பெற்றது

கலவையான விமர்சனங்களை பெற்றது

தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வந்த நடிகை ரஷ்மிகா மந்தனா தமிழில் எப்பொழுது அறிமுகமாவார் என தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான சுல்தான் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

 பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து

பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து

தமிழ் அறிமுகத்தைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வர சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அமிதாப் பச்சன் என முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து வருகிறார். இந்தநிலையில் ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் மாஸாக உருவாகிவரும் புஷ்பா திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 ஆடவாலு மீகு ஜோஹர்லு

ஆடவாலு மீகு ஜோஹர்லு

தென்னிந்தியாவை கடந்து இப்பொழுது பாலிவுட்டிலும் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் ரஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் சர்வானந்த் ஜோடியாக ஆடவாலு மீகு ஜோஹர்லு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற வருடமே தொடங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற முடியாமல் தடைபட்டு இப்பொழுது மீண்டும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அழகான குடும்பப் பின்னணியில் காதல் திரைப்படமாக உருவாகி வரும் ஆடவாலு மீகு ஜோஹர்லு படத்தை இயக்குனர் கிஷோர் திருமலா இயக்கிவருகிறார். எஸ் எல் வி சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X