பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா.. ரிலீஸ் எப்ப தெரியுமா!
மும்பை : நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் புஷ்பா படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கவுள்ள ராஷ்மிகாவின் நடிப்பில் வெளியாகும் முதல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கில் முக்கியமான ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்திருந்த புஷ்பா படம் வெளியானது. மரக்கடத்தலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா.

புஷ்பா படம்
இந்தப் படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக சாமி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமந்தாவின் ஊ சொல்றியா பாடலுக்கு இணையாக இந்தப் பாடலும் வரவேற்பை பெற்றது. படத்தில் கிராமத்து கேரக்டரில் தன்னுடைய கெட்டப்பை மாற்றிக் கொண்டு நடித்திருந்தார் ராஷ்மிகா.

விஜய்யுடன் ஜோடி
தற்போது இந்தப் படத்தின் வெற்றி விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை ராஷ்மிகாவிற்கு பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படத்தில் மிகவும் போல்டான கேரக்டரில், குடும்பத்தினர் மீது மிகவும் பாசம் வைத்துள்ள கேரக்டரில் நடித்துள்ளாராம் ராஷ்மிகா. படத்தில் விஜய்க்கு இரண்டு கெட்டப்புகள் உள்ளதாக கூறப்படும்நிலையில், ராஷ்மிகா யாருக்கு ஜோடியாகியுள்ளார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிற்னர்.

பாலிவுட்டில் என்ட்ரி
தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் ராஷ்மிகா, பாலிவுட்டிலும் தனது என்ட்ரியை கொடுக்கவுள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நீனா குப்தா ஆகியோருடன் இந்தப் படத்தில் ராஷ்மிகா நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் காமெடி களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 7ல் ரிலீஸ்
இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். அக்டோபர் 7ம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விகாஷ் பால் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக அவர் கமிட்டானது என்னவோ மிஷன் மஜ்னு படம்தான்.

பாலிவுட்டில் பிசி
சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கத்தில் இந்தப் படத்தில் அவர் நடித்துள்ளார். ஆனால் முதலில் வெளியாகவுள்ளது குட்பை தொடர்ந்து ரன்பீர் கபூருடன் அனிமல் என்ற படத்திலும் நடித்து வருகிறார். முதல் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே பாலிவுட்டில் அவர் மிகவும் பிசியான நடிகையாக மாறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











