அதை எல்லாம் நான் மறக்கவே மாட்டேன்.. ராஷ்மிகா மந்தனாவுக்கு இப்படி ஒரு கஷ்டமா?

ஹைதராபாத்: நேஷனல் க்ரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகாவுக்குள் இப்படி ஒரு கஷ்டமா என பேசிவருகின்றனர்.

ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா.

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா

விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் காவாலி பாடலின் ராஷ்மிகாவை பார்த்த ரசிகர்கள் சொக்கித்தான் போயினர். இதனையடுத்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். தொடர்ந்து டியர் காம்ரேட், புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து தெலுங்கில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

நேஷனல் க்ரஷ், எக்ஸ்ப்ரெஷன் குயின் ராஷ்மிகா மந்தனா

நேஷனல் க்ரஷ், எக்ஸ்ப்ரெஷன் குயின் ராஷ்மிகா மந்தனா

தெலுங்கில் மட்டுமின்றி ஹிந்தியில் அவர் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சாண்டல்வுட்டில் தொடங்கி டோலிவுட், கோலிவுட் என பயணப்பட ஆரம்பித்து இப்போது பாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கும் ராஷ்மிகாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் எனவும், எக்ஸ்பிரெஷன் குயின் எனவும் அழைத்துவருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் போராடும் ராஷ்மிகா மந்தனா

தமிழ் சினிமாவில் போராடும் ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனக்கென இடத்தை வைத்திருக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். அந்தப் படமும் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனால் தமிழில் எப்படியாவது ஒரு இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார் ராஷ்மிகா.

ராஷ்மிகாவுக்கு சொகுசு பங்களாக்கள்?

ராஷ்மிகாவுக்கு சொகுசு பங்களாக்கள்?

இந்திய அளவில் ரவுண்டு கட்டி அடித்துவரும் ராஷ்மிகா மந்தனா நிறைய சொத்து சேர்த்துவிட்டார் என தகவல் பரவியது. அதுமட்டுமின்றி ஐந்து மாநிலங்களில் சகல வசதிகளுடன் ஐந்து சொகுசு பங்களாக்களை அவர் கட்டியிருப்பதாகவும், பல பிஸ்னஸ்களை அவர் செய்துவருவதாக தீயாக தகவல் பரவியது. ஆனால் அதனை ராஷ்மிகா திட்டவட்டமாக மறுத்தார்.

ராஷ்மிகா மந்தனாவின் வறுமை

ராஷ்மிகா மந்தனாவின் வறுமை

இந்நிலையில் தனது இளமை காலத்தில் பட்ட வறுமை குறித்து மனம் திறந்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அவர் அளித்த பேட்டி ஒன்றில், "என்னுடைய பெற்றோர்கள் சினிமா துறையிலிருந்து விலகியிருக்கிறார்கள்., அவர்களை என்னை கஷ்டப்பட்டுத்தான் வளர்த்தார்கள். நான் என்ன செய்கிறேன் என்றெல்லாம் அவர்கள் அறிந்துகொள்வதில்லை.

மாதந்தோறும் வீடு மாறுவோம்

மாதந்தோறும் வீடு மாறுவோம்

நான் விருதுகள் வாங்கும்போது மட்டும் அவர்கள் பெருமைப்பட்டுக்கொள்வார்கள். இன்னும் நான் சிறப்பாக செயல்பட்டு அவர்களை பெருமைப்படுத்துவேன். அவர்கள் கஷ்டப்பட்டாலும் சிறு வயதில் என்னை எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்தார்கள். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். வாடகை கொடுக்க முடியாமல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீடு தேடி அலைந்தோம். அவர்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் நான் உணர்ந்திருக்கிறேன்" என உருக்கமாக தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X