மாமியார், மாமனாரை மகிழ்ச்சிப்படுத்திய ராஷ்மிகா மந்தனா.. திருமணத்துக்கு பின் இப்படி ஒரு மாற்றமா?

ஹைதராபாத்: ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். நேற்று இரண்டு பேரும் விஜய்யின் சொந்த ஊருக்கு சென்று அரசு பள்ளி மாணவர், மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கினார்கள். அப்போது ராஷ்மிகா பேசியதும், அவர் நடந்துகொண்ட விதமும் அவரது மாமியார்,மாமனாரை ரொம்பவே சந்தோஷப்படுத்தியது. அது ரசிகர்களிடையே கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

நேஷனல் க்ரஷ் என்று கொண்டாடப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் முதலில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்தார். நிச்சயதார்த்தமெல்லாம் நடந்தது. ஆனால் திருமணம் வரை செல்லவில்லை. ரக்‌ஷித்தை பிரிந்த ராஷ்மிகா; நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்தார். இரண்டு பேரும் சில வருடங்கள் காதலித்த பிறகு; ஹைதராபாத்தில் வைத்து எளிமையான முறையில் நிச்சயதார்த்தத்தை செய்துகொண்டார்கள். அதனையடுத்து திருமணமானது சில மாதங்களுக்கு முன்பு உதய்பூரில் நடைபெற்றது.

Rashmika Mandanna s Gesture Leaves Vijay Deverakonda s Parents Delighted at Public Event
Photo Credit:

உறுதி கொடுத்த விஜய் தேவரகொண்டா: திருமணத்தை முடித்துவிட்டு; ஹைதராபாத்தில் நட்சத்திர ஹோட்டலில் ரிசப்ஷனையும் நடத்திய அவர்கள்; விஜய் தேவரகொண்டாவின் சொந்த ஊரான தும்மன்பேட்டுக்கு சென்றார்கள். அப்போது, ', "நாகர்குர்னூல் மாவட்டத்தில் இருக்கும் 44 அரசு பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்" என உறுதி கொடுத்திருந்தார்கள். அது பலரிடமும் பாராட்டை பெற்றது.

Also Read
எல்லாம் விதி.. இமயமலைக்கு சென்றிருப்பேன்.. குட் பை சொல்ல நினைத்த நிவேதா பெத்துராஜ்.. என்ன நடந்தது?
எல்லாம் விதி.. இமயமலைக்கு சென்றிருப்பேன்.. குட் பை சொல்ல நினைத்த நிவேதா பெத்துராஜ்.. என்ன நடந்தது?

சொன்னதை செய்த ஜோடி: அவர்கள் அறிவித்தபடி விஜய் தேவரகொண்டா ஃபவுண்டேஷன் சார்பில் மொத்தம் 180 மாணவ, மாணவிகளுக்கு நேற்று உதவி தொகையை வழங்கினார்கள். அந்த நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டவின் தாய், தந்தை ஆகியோர் கலந்துகொண்டார்கள். அவர்களிடம் மாணவர்களும், மாணவிகளும் சந்தோஷத்துடன் உதவி தொகையை பெற்றுக்கொண்டார்கள்.

ராஷ்மிகா மந்தனா செய்தது: இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின்போது ராஷ்மிகா மந்தனா செய்த செயல் ஒன்று அவரது மாமியார்,மாமனாரை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. அதாவது, மேடையில் அவர் பேச்சை தொடங்கியபோது,'ராஷ்மிகா மந்தனா தேவரகொண்டா' என்று விளித்தார்.தங்களுடைய குடும்ப பெயரை ராஷ்மிகா அவரது பெயருடன் சேர்த்துக்கொண்டதை பார்த்து உச்சபட்ச சந்தோஷமடைந்தார்கள் மாமியாரும், மாமனாரும்.

எவ்வளவு அக்கறை தெரியுமா?: அதேபோல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது விஜய் தேவரகொண்டாவின் முகம் களைத்து போயிருந்தது. உடனே தாந்து கைக்குட்டையை வைத்து முகத்தை துடைத்துவிட்டார் ராஷ்மிகா. அதேபோல் விஜய்யின் இறங்கியிருந்த மீசையையும் முறுக்கிவிட்டார். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ரசிகர்களும், மாமியார், மாமனாரும் கணவர் மீது ராஷ்மிகாவுக்கு எவ்வளவு அக்கறை என கண் கொட்டாமல் பார்த்து ரசித்து மகிழ்ந்தார்கள்.

விஜய் தேவரகொண்டா பதிவு: முன்னதாக, இந்த நிகழ்ச்சி குறித்து நேற்று விஜய் தேவரகொண்டா பகிர்ந்திருந்த பதிவில், "நாங்கள் இப்போது தும்மன்பேட் நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கிறோம். அது எனது தந்தை பிறந்த சிறிய கிராமம். பிப்ரவரி மாதத்தில் நானும், ராஷ்மிகாவும் எங்கள் சிறிய கனவின் தொடக்கத்தை அறிவித்தோம். தெலங்கானாவின் அச்சம்பேட் மண்டலத்தில் இருக்கும் 9 மற்றும் பத்தாம் வகுப்பில் கடினமாக உழைக்கும் மாணவர்களை பாராட்டி ஊக்குவிக்க அந்த முயற்சியை தொடங்கினோம். தங்கள் பெற்றோர்களை பெருமைப்பட வைத்த 180 மாணவர்களின் பட்டியல் இதோ" என குறிப்பிட்டு; சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், மாணவிகளின் லிஸ்ட்டையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X