இணையத்தை அலறவிட்ட ராஷ்மிகா மந்தனா.. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் வைத்த ரசிகர்கள்!
சென்னை : நடிகை ராஷ்மிகா மந்தனா கார்த்தியின் சுல்தான் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர்.
தெலுங்கில் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர். சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்து வெளியான புஷ்பா படம் சூப்பர் ஹிட்டானது.
இதையடுத்து புஷ்பா 2 படத்தில் களமிறங்கவுள்ள ராஷ்மிகா, தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து பாலிவுட்டிலும் அமிதாப் பச்சன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். பாலிவுட்டில் அவர் கைவசம் 3 படங்கள் உள்ளன. பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக விரைவில் மாறுவார் என்று ரசிகர்கள் ஆரூடம் தெரிவிக்கின்றனர்.

சுல்தான் படத்தில் அறிமுகம்
தமிழில் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படம் மூலம் இவர் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தெலுங்கில் மிகவும் பிசியான நடிகையாக நடித்து வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்து வெளியான புஷ்பா படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் கெட்டப்பை மாற்றி நடித்திருந்த ராஷ்மிகாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தன.

வாரிசு படத்தில் ராஷ்மிகா
குறிப்பாக சாமி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம், படத்தில் சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு இணையான வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திலும் ராஷ்மிகா அல்லு அர்ஜுனுக்கு ஜோடி சேரவுள்ளார். இதனிடையே தமிழில் விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
இந்தப் படத்தில் தன்னுடைய குடும்பத்தின் நலனுக்காக போல்டான முடிவுகளை எடுக்கும் கேரக்டரில் ராஷ்மிகா நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அவரது கேரக்டர் ரிலீசுக்கு பிறகு பேசப்படும் என்றும் படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது. இதனிடையே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ராஷ்மிகா மந்தனா.

கவர்ச்சி தூக்கலான புகைப்படங்கள்
தொடர்ந்து தன்னுடைய பர்சனல் அப்டேட்கள், கேரியர் கமிட்மெண்ட்டுகளை வெளியிட்டுவரும் ராஷ்மிகா, அவ்வப்போது விதவிதமான போட்டோஷுட்களை எடுத்து அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாகத்தான் காணப்படுகிறது. தற்போது கருப்பு வெள்ளையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் கவர்ச்சி அள்ளுகிறது. இதையடுத்து தொடர்ந்து ராஷ்மிகா ட்ரெண்டிங்கில் உள்ளார்.


Click it and Unblock the Notifications











