Rashmika Mandanna: இரட்டை ஜடை.. பள்ளிச்சீருடை.. இது நம்ம 'நேஷ்னல் கிரஷ்' ராஷ்மிகாவா? வைரலாகும் அரிய புகைப்படம்
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா - நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் உதய்ப்பூரில் மிகவும் பிரமாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கு மிகவும் நெருங்கிய வட்டாரத்தினர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் வரும் மார்ச் 4ஆம் தேதி இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இவர்களின் திருமண ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இப்படி இருக்கையில் ராஷ்மிகா மந்தனாவின் பள்ளி கால புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கினாலும், இன்றைக்கு நேஷ்னல் கிரஷ் என்று இந்தியா முழுவதும் அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி என ஒரு பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். இப்படி இருக்கையில் ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள் என்ற தகவல் இணையத்தில் பரவியது. மேலும் சிலர் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் இன்ஸ்டாகிராம் ஆக்டிவிட்டிகளைப் பார்க்கும்போது, அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று தொடர்ந்து கூறி வந்தனர்.

இப்படி இருக்கையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த போது கூட இருவரும் கப்சிப் என்று அமைதியாக இருந்தனர். ஆனால் தொடர்ந்து இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் வெளிவர, ஒரு கட்டத்தில் இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இருவரும் அதை, The Wedding of VIROSH என்று குறிப்பிட்டு பகிர்ந்தனர்.
கோலாகல ஏற்பாடு: இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெறவுள்ளது. அதேபோல் திருமணத்தில் கலந்து கொள்ளும் யாரும் மொபைல் போன்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அம்பானியின் குடும்பத்தினர் நேற்றே உதய்ப்பூருக்குச் சென்றுவிட்டனர்.

பள்ளிக்கால புகைப்படம்: இப்படி இருக்கையில் நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவரது பள்ளிக் கால புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில், பள்ளிச் சீருடையில் இரட்டை ஜடை போட்டுக் கொண்டு செம க்யூட்டான குழந்தையாக இருக்கிறார். கர்நாடகா மாநிலத்தின் விராஜ்பேட்டையில் பிறந்த ராஷ்மிகா மந்தனா, கூர்க் பப்ளிக் பள்ளியில் படித்தார். 2014ஆம் ஆண்டு தி ஃபிரஷ் ஃபேஸ் என்ற டைட்டிலை வென்றார். அதில் இருந்து தான் அவரது திரை வாழ்க்கை தொடங்கியது என்றே கூறலாம். தற்போது இந்த பள்ளி கால புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











