Don't Miss!
- News
குறிச்சு வச்சுக்கோங்க.. 2024 நாடாளுமன்றத் தேர்தல்.. எனது ஆட்டத்தைப் பாருங்கள்.. எச்சரிக்கும் சீமான்!
- Sports
அந்த ஒரு சில ஷாட்கள் போதும்பா.. நியூசி, தொடரில் ரோகித் ஆடிய ஆட்டம்.. வசீம் ஜாஃபர் சுவாரஸ்ய கருத்து!
- Finance
3 நாட்களுக்கு பிறகு சரிந்த தங்கம் விலை.. நல்ல சான்ஸ் தான்.. மிஸ் பண்ணிட்டோமோ?
- Automobiles
கார் ஓட்டும்போது ஏன் கழுத்து வலிக்குது தெரியுமா? இந்த விஷயங்களை செஞ்சா வலி இருந்த இடமே தெரியாம பறந்து போயிரும்
- Lifestyle
நீங்க நினைத்ததை விட எடையை வேகமாக குறைக்க இந்த பழங்கள் அல்லது காய்கறி சாறுகளில் ஒன்றை தினமும் குடித்தால் போதும்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
தூங்கி வழியும் ராஷ்மிகா..மாலத்தீவில் மட்டும் தான் ஆட்டம்போடுவீங்களா? ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை : படப்பிடிப்பு தளத்தில் தூங்கி வழியும் ராஷ்மிகா மந்தனாவைப் பார்த்து ரசிகர்கள் கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர்.
2016ம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
இவர் நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல கன்னட திரைப்படங்களில் நடித்தார்.
ராஷ்மிகா மந்தனா, ராதிகா உடன் வாரிசு சக்சஸ் பார்ட்டி.. வெறித்தனம் காட்டும் தளபதி 67 லுக்கில் விஜய்!

ராஷ்மிகா
துறுதுறுப்பான பார்வை... பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் அழகு... என திரைத்துறைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே இளம் நெஞ்சங்களின் மனதில் இடம் பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் க்யூட்டான சிறு சிறு அசைவுகளை ரசித்த ரசிகர்கள். ராஷ்மிகாவை விடாது பின் தொடர்ந்து வருகின்றனர்.

புஷ்பா படத்தில் செம ஆட்டம்
நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் ஜோடியாக 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு செம கவர்ச்சியாக நடித்திருந்தார். அதுவும், வா சாமி பாடலுக்கு அம்மணி ஆடிய ஆட்டம் பல ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்தது.

வாரிசு படத்தில்
தமிழில் வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து தனது நீண்டநாள் ஆசை நிறைவேற்றிக்கொண்டார். பேமிலி செண்டிமென்ட் கதை அம்சத்தைக் கொண்ட இந்த படம், வசூலை வாரிக்குவித்து வருகிறது. பாலிவுட்டில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஞ்சு திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. தற்போது ரன்பிர் கபூருடன் அனிமல் படத்திலும் புஷ்பா 2 திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

காதல் கிசுகிசு
ராஷ்மிகா விஜய்தேவரகொண்டாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும், மாலித்தீவுக்கு டேட்டிங் சென்றாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இணையத்தில் பரவி வரும் வதந்தி குறித்து இருவரும் வாய் திறக்காமல் மௌனமாக உள்ளனர். என்னத்தான் வதந்தி பரவினாலும் அதைப்பற்றி இருவரும் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை.

மாலத்தீவில் மட்டும் தான் ஆட்டம்போடுவீங்களா?
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா, தூங்கி வழியும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோ வாரிசு படப்பிடிப்பு தளத்தில் ஷூட்டிங்கிற்காக மேக்கப் மேன் ஹேர் ஸ்டைல் செய்துவிடுகிறார். ஆனால், ராஷ்மிகாவோ குறட்டை விடும் அளவுக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்.இந்த வீடியோவைபார்த்த நெட்டிசன்கள் மாலத்தீவில் மட்டும் தான் ஆட்டம்போடுவீங்களா? என கிண்டலடித்து வருகின்றனர்.