Don't Miss!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நேஷ்னல் கிரஷ்ன்னு ஒண்ணும் சும்மா சொல்லல.. ரசிகருக்காக ராஷ்மிகா மந்தனா என்ன பண்ணாரு தெரியுமா?
மும்பை: சமந்தா, நயன்தாராவை எல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு பாலிவுட்டில் கைவசம் பல படங்களுடன் படு பிசியாக நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
Recommended Video
நடிகர் விஜய்யுடன் தளபதி 66 படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, விரைவில் வெளியாக உள்ள தனது பாலிவுட் அறிமுக படமான மிஷன் மஜ்னுவுக்கான பணிகளையும் மும்பையில் அடிக்கடி கவனித்து வருகிறார்.
இந்நிலையில், திங்கட்கிழமை இறவு மும்பையில் சுற்றித் திரிந்த ராஷ்மிகா மந்தனா ரசிகருக்காக செய்த செயல் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மேலும், ரசிகர் வட்டத்தை அதிகரித்துள்ளது.
லோகேஷை காப்பி அடிக்கிறாரா நெல்சன்...தலைவர் 169 கதையால் கிளம்பிய புதிய சர்ச்சை
பெங்களூர் டூ மும்பை
பெங்களூரில் பிறந்து வளர்ந்து மும்பையில் மிகப்பெரிய நடிகையாக மாறியவர் நடிகை தீபிகா படுகோன். இந்நிலையில், அதே போல கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகையாக நடித்து தற்போது சித்தார்த் மல்கோத்ரா நடிப்பில் உருவாகி வரும் மிஷன் மஜ்னு படம் மூலம் விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர்
மிஷன் மஜ்னு மட்டுமின்றி அடுத்ததாக அமிதாப் பச்சன் உடன் இணைந்து குட்பை என்கிற பாலிவுட் படத்திலும், அதனை தொடர்ந்து ஆலியா பட்டின் கணவரும் பாலிவுட் நடிகருமான ரன்பீர் கபூர் உடன் இணைந்து அனிமல் என்கிற படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
சமந்தா, நயன்தாரா
இன்ஸ்டாகிராமில் சமந்தாவை எல்லாம் பின்னுக்குத்தள்ளி அதிக ஃபாலோயர்களுடன் தென்னிந்திய நடிகைகளே நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா தான் முதலிடத்தில் உள்ளார். மேலும், தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடருக்கு பிறகு சமந்தாவுக்கு பல பாலிவுட் படங்கள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை ஒரு படம் கூட ஒப்பந்தம் ஆகவில்லை. நயன்தாரா ஷாருக்கான் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், அந்த இருவரையும் பின்னுக்குத் தள்ளி 3 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் ராஷ்மிகா மந்தனா.
ரசிகருக்காக பாடிகார்டை முறைத்த ராஷ்மிகா
திங்கட்கிழமை இரவு மும்பையில் வெள்ளை நிற லாங் ஷர்ட் மற்றும் பேண்ட் அணிந்து கொண்டு வெளியே வந்த ராஷ்மிகா மந்தனாவை புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுத்துத் தள்ளினர். அப்போது, அந்த போட்டோவில் தானும் பங்கு பெற வேண்டும் என இளம் ரசிகர் ஒருவர் உள்ளே நுழைய, ராஷ்மிகா மந்தனாவின் பாடிகார்டுகள் அவரை பிடித்து அப்புறப்படுத்த முயன்றனர்.
நோ நோ அப்படி பண்ணாதீங்க
உடனடியாக தனது பாடிகார்டுகளை முறைத்த ராஷ்மிகா, நோ நோ அப்படி பண்ணாதீங்க என சொல்லி விட்டு, அந்த ரசிகருடன் சிரித்தபடியே போட்டோவும் எடுத்துக் கொண்டார். பாலிவுட்டில் அறிமுகம் ஆக உள்ள நிலையில், அங்குள்ள ரசிகர்களை கவர வேண்டும் என்பதில் ராஷ்மிகா கருத்துடன் இருக்கிறார் என்றும் ரசிகர்களிடம் கனிவாக இருப்பதால் தான் அவர் நேஷ்னல் கிரஷ் என அழைக்கப்படுகிறார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
விஜய்க்கு ஜோடி
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா தான் ஜோடியாக நடித்து வருகிறார். தளபதி 67 படம் மற்றும் இந்தியில் கமிட் ஆகி உள்ள 3 படங்கள் என அனைத்தையும் திட்டமிட்டு ஓய்வின்றி உழைத்து வருகிறாராம் ராஷ்மிகா மந்தனா.