Rashmika Mandanna: தமிழ், இந்தின்னு பார்க்கமாட்டேன்.. குபேரா இசை வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா பேச்சு!

சென்னை: கர்நாடகாவின் விராஜ்பேட்டில் பிறந்து வளர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் 2016ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கில், சலோ, கீதா கோவிந்தம் படங்களில் 2018ல் நடித்து டோலிவுட்டின் டாப் ஹீரோயினாக மாறினார். தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் கோலிவுட்டில் 2021ம் ஆண்டு அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்தன் பின்னர், மீண்டும் தற்போது தனுஷ் படமான குபேரா படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறார்.

கடந்த 2022ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்த குட் பை படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து இந்தி மொழியில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அனிமல் திரைப்படம் அவருக்கு பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது. சல்மான் கானின் சிக்கந்தர், விக்கி கவுஷல் உடன் இணைந்து சாவ்வா என பாக்ஸ் ஆபீஸ் பேபியாகவே மாறியுள்ள புஷ்பா பட ஹீரோயின் பான் இந்தியா படங்களில் மட்டுமே நடிக்கத் தான் நினைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

Rashmika Mandanna says I don t pick movies by Hindi Tamil Telugu language I chose stories

மொழிகளை கடந்து நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என தான் விரும்புவதாக நேற்று நடைபெற்ற குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார்.

29 வயசு ஆகிடுச்சு: நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வருவதாக ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையிலும், இருவரும் அதற்கு நேரடியாக பதில் தராமல் மறைமுகமாகவே பதில் அளித்து வருகின்றனர். பாலிவுட்டில் பிசியாக இருந்து வந்த ராஷ்மிகா மந்தனா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள குபேரா படத்தில் நடித்துள்ளார். அதன் இசை வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா மந்தனா சுடிதார் அணிந்து செம க்யூட்டாக வந்ததை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்தி, தெலுங்கு, தமிழ் பேதம் கிடையாது: கன்னட மொழியில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதில்லை என்கிற சர்ச்சை வெடித்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து ராசியான நடிகை என்றும் பாக்ஸ் ஆபீஸ் பேபி என்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் புகழை சம்பாதித்துள்ளார். நேற்று நடைபெற்ற குபேரா இசை வெளியீட்டு விழாவில், மேடையேறி பேசிய ராஷ்மிகா மந்தனா, "இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி என்கிற பேதம் பார்த்து நான் படங்களில் நடிப்பதில்லை. நல்ல கதைகள் தமிழில் இருந்து வந்தால் ஓடோடி இங்கே வந்துவிடுவேன், பான் இந்தியா படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்கிற எந்த சிந்தனையும் இல்லை, நல்ல கதைகள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் நடிக்க மட்டுமே ஆவலுடன் உள்ளேன் என்றார்.

தனுஷ் உடன் நடித்தது: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா சார் உடன் நடித்தது ரொம்பவே ஹேப்பியாக உள்ளது. தனுஷின் நடிப்பும், உழைப்பும் என்னை பிரம்மிக்க வைத்தது. நாகார்ஜுனா சார் உடன் நடிப்பது எல்லாம் எனக்கு கிடைத்த பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும், நிச்சயம் குபேரா படம் உங்களுக்கு பிடிக்கும், தியேட்டருக்குப் போய் பாருங்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X