படுக்கையில் படுத்து புரளும் ராஷ்மிகா... கூட யாரு இருக்காங்கன்னு தெரியுமா?: ட்ரெண்டாகும் வீடியோ
ஹைதராபாத்: கன்னடத்தில் கிரிக் பார்ட்டி திரைப்படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தற்போது டாப் ஹீரோயினாக அசத்தி வருகிறார்.
விஜய்யுடன் அவர் நடித்திருந்த வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் 11ம் தேதி வெளியாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுனுடன் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அடிக்கடி தனது பாய் ஃபிரண்டும் நடிகருமான விஜய் தேவரகொண்டா உடன் டேட்டிங் செல்லும் ராஷ்மிகாவின் பெட்ரூம் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ரஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா
கன்னடத்தில் 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் கொண்டு சேர்த்தது. அதுவரை கிரிக் பார்ட்டி பட ஹீரோ ரக்ஷித் ஷெட்டியை காதலித்து வந்தார் ராஷ்மிகா. ஒருகட்டத்தில் இருவருக்கும் நிச்சயம் நடக்கவிருந்தது. ஆனால் கீதா கோவிந்தம் கொடுத்த எனர்ஜியால் அப்படியே டேக் டைவர்சன் எடுத்த ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமானார்.

வாரிசு பட நாயகி ராஷ்மிகா
தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. அதேபோல் தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமானதோடு, விஜய்யுடன் வாரிசு படத்திலும் ஜோடி சேர்ந்தார். கடந்த மாதம் பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம் ராஷ்மிகாவுக்கு கோலிவுட்டில் சூப்பரான மார்க்கெட்டை ஓபன் செய்துகொடுத்துள்ளது. இதனிடையே அடிக்கடி விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங் செய்யும் போட்டோஸும் வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரலாகும் பெட்ரூம் வீடியோ
இந்நிலையில், தற்போது வெளியான ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது வீட்டின் படுக்கையறையில் உள்ள மெத்தையில் சகட்டுமேனிக்கு படுத்து புரள்கிறார் ராஷ்மிகா மந்தனா. அப்போது அதே மெத்தையில் ராஷ்மிகாவின் வளர்ப்பு நாயும் அவரது மேல் பாய்ந்து விழுந்து கட்டிப்பிடித்து புரள்கிறது. வளர்ப்பு நாயுடன் ராஷ்மிகா செல்லமாக சேட்டை செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலர் தின வாழ்த்து
மேலும் அந்த வீடியோவுடன் ராஷ்மிகா மந்தனா காதலர் தின வாழ்த்தும் கூறியுள்ளார். அதில், உங்களுக்கு எங்களின் காதலர் தின வாழ்த்துகள் என க்யூட்டாக கேப்ஷன் போட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவுடன் காதலர் தினம் கொண்டாடவில்லையா என கேட்டு வருகின்றனர். மேலும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனா தான் சிறந்த காதல் ஜோடி எனவும் பலவிதமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











