வச்ச குறி தப்பாது.. வில்லுல வித்தைக் காட்டும் ராஷ்மிகா மந்தனா.. பர்த்டே கொண்டாட்டம் களைகட்டுதே!
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா தனது 28வது பிறந்தநாளை ஏப்ரல் 5ம் தேதி கொண்டாடினார். கேக் வெட்டி கொண்டாடும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் ராஷ்மிகா மந்தனா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், அடுத்ததாக வில்வித்தை பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.

கர்நாடகாவின் விராஜ்பேட் என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா கடந்த 2014 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்த ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்த நிலையில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஆனால், திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் பிரிந்து விட்டனர்.
ராஷ்மிகா மந்தனா பிறந்தநாள்: நடிகர் ராஷ்மிகா மந்தனா தனது 28வது பிறந்தநாளை கடந்த ஏப்ரல் 5ம் தேதி கொண்டாடினார். ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியானது. அதைப் போலவே தி கேர்ள் பிரண்ட் படத்தின் போஸ்டரும் வெளியானது.

வில் வித்தை: பிறந்தநாளை முன்னிட்டு ராஷ்மிகா மந்தனா ஜிம்மில் பெரிய பந்தை வைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன் பின்னர் வெளிநாட்டுக்கு பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக டூர் சென்றுள்ள ராஷ்மிகா மந்தனா அங்கே வில் அம்பை வைத்து சரியாக டார்கெட் செய்து வச்ச குறி தப்பாது என்பது போல எய்ம் பார்த்து அடித்த ஷாட், நச்சுன்னு நடுவில் குத்த ராஷ்மிகா மந்தனா சந்தோஷமடையும் காட்சிகளை வெளியிட்டுள்ளார்.
அதிக சம்பளம் இல்லை: அனிமல் படத்துக்காக 4 கோடி ரூபாய் சம்பளம் ராஷ்மிகா மந்தனா வாங்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், ஓ அப்படியா, தயாரிப்பாளரிடம் இந்த செய்தியை காட்டி சம்பளத்தை வாங்கி விட வேண்டியதுதான் என கலாய்த்து போஸ்ட் ஒன்றை போட்டிருந்தார். நடிகை ராஷ்மிகா 2 முதல் 3 கோடி ரூபாய் தான் சம்பளமாக வாங்கி வருகிறாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
கண்டுக்காத தனுஷ்: ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்தியது. ஆனால், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தில் இருந்து ராஷ்மிகா மந்தனாவுக்கு எந்தவொரு ஸ்பெஷல் போஸ்டரோ பர்த்டே விஷ்ஷோ வரவில்லையே என ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











