விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம்.. உறுதி செய்த ராஷ்மிகா மந்தனா.. வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டாவை வரும் 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இரண்டு பேரின் திருமணம் பற்றி கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் தொடர்ந்து பரவினாலும்; அவர்கள் எதுவும் அறிவிக்காமல் இருந்தார்கள். இந்நிலையில் நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா தனது திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

நேஷனல் க்ரஷ் என கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்துவந்தார். அவர்களது காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் உடனடியாக சம்மதம் கிடைத்தது. அதனையடுத்து திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டார்கள். அதன்படி கடந்த வருடத்தில் ஹைதராபாத்தில் வைத்து தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்கள். அதுதொடர்பான தகவல்களை அவர்கள் ரொம்பவே சீக்ரெட்டாக வைத்திருந்தார்கள்.

Rashmika Mandanna Shares Official Wedding Announcement with Vijay Deverakonda VIROSH Wedding
Photo Credit:

இன்னும் சில நாட்களில் திருமணம்: நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என இரண்டு பேரின் ரசிகர்களும் ரொம்பவே ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, வரும் 26ஆம் தேதி உதய்பூரில் வைத்து திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும்; இத்திருமணத்துக்கு எந்த பிரபலத்தையும் அழைக்காமல்; நிச்சயதார்த்தத்தை எப்படி செய்துகொண்டார்களோ அதேபோல் இதையும் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது.

வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஒவ்வொரு நாளும் அவர்களது திருமணம் பற்றிய தகவல்களாகத்தான் சோஷியல் மீடியாவில் வட்டமடிக்க ஆரம்பித்திருந்தன. ஆனாலும் மணமக்களான விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் தங்களது திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார்கள். திருமண தேதி நெருங்கி வந்த சூழலில் அவர்கள் அறிவிப்பை வெளியிடாதது ரசிகர்களிடையே குழப்பத்தை உண்டு செய்தது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது திருமணம் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ராஷ்மிகாவின் இன்ஸ்டா போஸ்ட்: அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நாங்கள் எந்த திட்டத்தையும் போடுவதற்கு முன்பே; எதையும் தேர்வு செய்வதற்கு முன்பே நீங்கள் ஏற்கனவே எங்களுடன் இருந்தீர்கள். அளவற்ற அன்புடன் எங்களுக்கு நீங்கள் ஒரு பெயரையும் கொடுத்தீர்கள். எங்களை VIROSH என்றும் அழைத்தீர்கள். அதனால் இன்று நிறைந்த மனதுடன் உங்கள் அன்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக; நாங்கள் இணைவதை ஒரு பெயரில் அழைக்க விரும்புகிறோம்.

VIROSH திருமணம்: அது 'VIROSH திருமணம்'. எங்கள் இரண்டு பேரையும் இவ்வளவு அன்புடன் தாங்கி நிற்கும் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. நீங்கள் எப்போதும் எங்களின் ஒரு பகுதியாகவே இருப்பீர்கள்" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த இன்ஸ்டா போஸ்ட் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. ஒரு வழியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டதால் இரண்டு பேரின் ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியோடு அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துவருகிறார்கள்.

பிரமாண்ட ஏற்பாடுகள்: முன்னதாக, இந்தத் திருமணத்தில் முகேஷ் அம்பானி, சந்தீப் ரெட்டி வங்கா, சல்மான் கான், கரண் ஜோஹர் என பல பிரபலங்கள் கலந்துகொள்வார்க்ள் என கூறப்படுகிறது. இத்திருமணத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபவடுதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் வெளிநாடுகளிலிருந்து பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. 26ஆம் தேதி நடக்கும் திருமணத்துக்கு பிறகு ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமண ரிசப்ஷன் நடத்த திட்டமிட்டிருக்கிறார். திருமணம், ரிசப்ஷனை முடித்துவிட்டு திரைத்துறையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் பிரேக் எடுக்க இரண்டு பேரும் முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X