அஜித்தின் மாஸை பார்த்து வியந்த விஜய் நடிகை.. 'தல' கோஷத்தால் அதிர்ந்த அரங்கம்.. வைரல் வீடியோ!
Recommended Video
சென்னை: சினிமா விழா ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோ அஜித் பெயரை சொன்னதும் ரசிகர்கள் அரங்கம் அதிர கத்தியது பெரிய வைரலாகி உள்ளது.
நடிகர் அஜித் இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட ஹீரோக்களில் ஒருவர். அதிலும் தமிழ்நாட்டில் இவருக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதேபோல் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். தென் தமிழகத்தில் இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

மாட்டார்
பொதுவாக நடிகர் அஜித் சினிமா விழாக்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டார். பொது விழாக்களில் அஜித்தை பார்ப்பதே கடினம். அதேபோல் தன்னுடைய படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் கூட அஜித் கலந்து கொள்ள மாட்டார். எங்கும் விருது வாங்க கூட அவர் செல்ல மாட்டார்.

ஆனால் என்ன
ஆனால் இவர் பொது விழாக்களில் கலந்து கொள்ளாவிட்டாலும், பல்வேறு விழாக்களில் பல ஹீரோக்கள், நடிகைகள் இவரின் பெயரை சொல்லி இருக்கிறார்கள். இவர் நடிக்காத படத்தின் விழாவில் கூட அஜித் என்று பெயர் பல முறை ஒலித்துள்ளது. பொதுவாக அஜித் என்று யார் சொன்னாலும் அங்கு அரங்கம் அதிர்வது இயல்பாக நடக்கும்.

என்ன அரங்கம்
இந்த நிலையில் சினிமா விழா ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோ அஜித் பெயரை சொன்னதும் ரசிகர்கள் ஆரவாரமாக கூச்சலிட்டனர். யாருடன் நடிக்க விருப்பம் என்று ராஷ்மிகாவிடம் தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு ராஷ்மிகா அஜித் பெயரை குறிப்பிட்டார்.
அட
இதை கேட்டதும் ரசிகர்கள் தல, தல என்று கத்தி கூச்சலிட்டனர். அரங்கமே தல என்ற கோஷத்தால் சில நிமிடம் அதிர்ந்தது. சுமார் 30 நொடிகள் விடாமல் அஜித் ரசிகர்கள் இப்படி கத்திக் கொண்டு இருந்தனர். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

உணர்ந்து கொண்டார்
இதை பார்த்த பின்தான் தலைக்கு இவ்வளவு மாஸ் இருக்கிறதா என்பதை ராஷ்மிகா உணர்ந்து கொண்டார். ராஷ்மிகா தற்போது விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவர் எதிர்காலத்தில் அஜித் உடன் நடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











