Rashmika Mandanna - காதலர் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும்.. ராஷ்மிகாவின் எதிர்பார்ப்பு இதுதானா?

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். க்ரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் நடிகையான அவருக்கு இப்போது நேஷ்னல் க்ரஷ் என்ற பட்டத்தை ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அவரும், விஜய் தேவரகொண்டாவும் காதலித்துவருகிறார்கள் என்று கடந்த சில வாரங்களாகவே பலமாக பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

கன்னட சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கு சினிமா பலத்த வரவேற்பை கொடுத்தது. விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் அவரது நடிப்பும், அழகும் ரசிகர்களையும், திரைத்துறையினரையும் கவர அடுத்தடுத்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் அசுர வேகத்தில் வளர்ந்தார்.

Rashmika Mandanna Talks about Her Future Life Partner

புஷ்பா: தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனாவுக்கு புஷ்பா திரைப்படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி மெகா ஹிட்டானதால் ராஷ்மிகா மந்தனாவுக்கு மேலும் புகழ் வெளிச்சம் கிடைத்தது. அதேபோல் அந்தப் படத்தில் அவர் ஆடிய நடனமும் பெரும் வரவேற்பை பெற்றது.

நேஷனல் கிரஷ்: புஷ்பா படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ் என்ற பெயரை பெற்றார். அவரது எக்ஸ்பிரஷென்கள் பயங்கர க்யூட்டாக இருக்கிறது என்று ரசிகர்கள் சிலாகிக்க ஆரம்பித்தனர். சூழல் இப்படி இருக்க தமிழில் சுல்தான் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. விஜய்யுடன் நடித்த வாரிசு படமும் தோல்வியை சந்தித்ததால் கோலிவுட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருக்கிறார்.

அனிமல்: தமிழில் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டாலும் ஹிந்தியில் வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் அவர் கடைசியாக ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் நடித்திருந்தார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அந்தப் படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

கிளாமர் உச்சபட்சம்: இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கிளாமரில் உச்சம் சென்றிருக்கிறார். முத்த காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என அனைத்திலும் நடித்திருக்கிறார். இதற்காக அவர் 15 கோடி ரூபாய்வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாகவும் இரண்டு பேரும் வெளிநாட்டுக்கு அடிக்கடி பறப்பதாகவும் ஒரே வீட்டில் தங்குவதாகவும் கடந்த சில மாதங்களாகவே பேச்சு ஓடுகிறது. மேலும் அவர்கள் இருவருக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாகவும் கடந்த சில வாரங்களாகவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் தனது காதலர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ராஷ்மிகா மந்தனா பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில், "எனக்கு அமையப்போகும் காதலரின் கடந்த காலத்தில் எப்படியான உறவு இருந்திருந்தாலும் பரவாயில்லை. அது நிகழ்காலத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும். கண்டிப்பாக சிகரெட் பிடிக்கும் பழக்கமோ, மதுவுக்கு அடிமையாகவோ இருக்கக்கூடாது.

பார்ட்டி ஓகே: எப்போதாவது பார்ட்டியில் பங்கேற்கும் சோஷியல் ட்ரிங்கராக இருந்தால் ஓகேதான். உண்மையாகவும், அன்பாகவும் எங்களுக்குள் வைப் செட் ஆகும் வகையில் இருக்க வேண்டும். எனது காதலர் ரொமாண்ட்டிக் நபராக இருக்க வேண்டும். அதேபோல் உயரமாகவும், கட்டுக்கோப்பான உடலமைப்பை கொண்டவரும்தான் எனது சாய்ஸ். வயது வித்தியாசம் எல்லாம் பெரிய விஷயம் இல்லை" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X