தவறாமல் இதை செய்யுங்கள்.. அழகாக இருப்பதற்கு டிப்ஸ் கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா
ஹைதராபாத்: தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா அழகாக இருப்பது எப்படி என்பது குறித்து பேசியிருக்கிறார்.
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டவர் ராஷ்மிகா மந்தனா. இவர் 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரது அழகையும், நடிப்பையும் பார்த்த தெலுங்கு திரையுலகம் ராஷ்மிகாவும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது.

தெலுங்கில் கலக்கிய ராஷ்மிகா மந்தனா
விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். அதனையடுத்து டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் ராஷ்மிகா மந்தனாவுக்கென்ற ரசிகர்கள் குறையவில்லை. தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழில் சொதப்பும் ராஷ்மிகா மந்தனா
தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். விஜய்யுடன் நடித்திருப்பதால் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வரலாம் என கணக்கு போட்டார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு அவரால் ஒரு ரவுண்டு வரமுடியவில்லை.

நேஷனல் க்ரஷ், எக்ஸ்ப்ரெஷன் குயின் ராஷ்மிகா மந்தனா
தமிழில் அவர் திணறினாலும் ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையே பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கிறார்கள்.

அழகு குறித்து ராஷ்மிகா செய்திருக்கும் அட்வைஸ்
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அழகு குறித்து பேசியிருக்கிறார். அதில் பேசிய அவர், "அழகுக்கு உதாரணமாக யாரையும் சொல்ல முடியாது. எல்லோரிடமும் ஒரு அழகு இருக்கத்தான் செய்கிறது. மற்றவர்களுக்காக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை. கண்ணாடியின் முன் நின்று பார்க்கும்போது, ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கிறோம் என்ற எண்ணம் எழுந்தால் போதும்.

அழகாக மாற இதை செய்யுங்கள் - ராஷ்மிகா மந்தனா
உடல் பருமனாக இருந்தால்தான் சிலர் அழகாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எதற்காகவும் தங்கள் உடல் வடிவத்தை மாற்றிக்கொள்ளாதீர்கள். ஆறு மாதங்கள் உடற்பயிற்சி செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். எனக்கு நான் ஒரு உடற்பயிற்சியாளரை நியமத்திருக்கிறேன். அவரது ஆலோசனைகளை தவறாமல் கடைப்பிடிக்கிறேன். அதனால் எனது கட்டுக்கோப்பான உடல் தோற்றத்தை காப்பாற்றிவருகிறேன்" என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











