ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம்.. தலைக்கு மேல் வேலைகள்.. நேஷனல் கிரஷ்ஷின் அதிரடி முடிவு
சென்னை: ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் வரும் 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். ஒட்டுமொத்த ரசிகர்களும் அந்தத் திருமணத்தை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். தங்களுக்கு நெருக்கமானவர்களை மட்டுமே திருமணத்துக்கு அழைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மார்ச் 4ஆம் தேதி தாஜ் ஹோட்டலில் ரிசப்ஷன் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா எடுத்திருக்கும் முடிவு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. தங்களுக்கு மலர்ந்த காதலை சீக்ரெட்டாகவே வைத்திருக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் ஒன்றாக அவுட்டிங் சென்ற புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் லீக்காகி அவர்கள் உறவு பற்றி பேச்சுக்களை கிளப்பிவிட்டன. ஒருகட்டத்தில் ராஷ்மிகாவும் தான் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக மறைமுகமாக சொல்ல ஆரம்பித்தார்.
திருமணம் செய்துகொள்ளப்போகும் ஜோடி: இரண்டு பேரின் காதலுக்கும் இரு வீட்டிலும் சம்மதம் கிடைத்தது. இதனையடுத்து கடந்த வருடத்தில் சிம்ப்பிளாக குடும்பத்தினர் மத்தியில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தொடர்ந்து அவர்களுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி எழ ஆரம்பித்தது. இரண்டு பேரும் பிப்ரவரி 26ஆம் தேதி உதய்பூரில் வைத்து திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள்.

ரூல்ஸ் போட்ட ஜோடி: இந்தத் திருமணத்துக்கு திரையுலக பிரபலங்கள் யாரையும் அவர்கள் அழைக்கவில்லை. மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் உறவினர்களும், நண்பர்களும் மொபைல் ஃபோன்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கூறியிருப்பதாக ஒரு தகவல் பரவிவருகிறது. அதுமட்டுமின்றி நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அவர்களது திருமண நிகழ்வை வெளியிட முன்வந்ததாகவும் அதற்கு விஜய் தேவரகொண்டா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
ரிசப்ஷன் எப்போது?: திருமணத்துக்கு திரையுலக பிரபலங்களை அழைக்காவிட்டாலும் மார்ச் நான்காம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் தாஜ் நட்சத்திர ஹோட்டலில் ரிசப்ஷனை நடத்த அந்த் ஜோடி திட்டமிட்டிருப்பதாகவும்; அதில் டோலிவுட், கோலிவுட், பாலிவுட் பிரபலங்கள் எல்லாம் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா எடுத்திருக்கும் அதிரடி முடிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
என்ன முடிவு?: அதாவது திருமண வேலைகள் தலைக்கு மேல் கிடப்பதால் ஒரு பாலிவுட் படத்திலிருந்து விலகியிருக்கிறார். அமிஷ் ஷர்மா இயக்கத்தில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியிருந்தார். ஆனால் திருமணத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தொடர் ஷூட்டிங்கில் கலந்துகொள்வது அவ்வளவு சரியாக இருக்காது என்பதால் இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











