திருமணமான பின் முதல் பிறந்தநாள்.. 30 வயதில் ராஷ்மிகா மந்தனா சொத்து மதிப்பு தெரியுமா?.. ஆத்தாடி இவ்வளவா?
ஹைதராபாத்: நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனா சில மாதங்களுக்கு முன்புதான் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் திருமணமாகி ஒரே மாதத்தில் அம்மணி கர்ப்பமாக இருக்கிறார் என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அது இன்னமும் உறுதியாகவில்லை. சூழல் இப்படி இருக்க விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்த பிறகு முதல் பிறந்தநாளை நேஷனல் க்ரஷ் இன்று கொண்டாடிவருகிறார்.
பெங்களூருவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட திரையுலகத்தில் அறிமுகமானபோது; முதல் படத்தில் தனக்கு ஜோடியாக ரக்ஷித் ஷெட்டியை தீவிரமாக காதலித்தார். இரண்டு பேருக்குமிடையே நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரை செல்லவில்லை. முதல் காதல் முறிந்ததால் ரொம்பவே சோகமானார் ராஷ்மிகா. அதேசமயம் கரியரில் கவனத்தை தவறவிடவில்லை. இதன் காரணமாக அடுத்தடுத்து ஹிட்டுகள் கொடுத்து பான் இந்தியா ஹீரோயினாக மாறினார்.

விஜய் தேவரகொண்டாவுடன் காதல்: இதற்கிடையே நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சில படங்களில் பணியாற்றியபோது இரண்டு பேருக்குமிடையே காதல் மலர்ந்தது. அந்தக் காதலுக்கு வீட்டில் உடனடியாக சம்மதமும் கிடைத்தது. சில வருடங்கள் தீவிரமாக காதலித்த அவர்கள்; கடந்த வருடத்தில் சிம்ப்பிளாக தங்கள் வீட்டிலேயே வைத்து நிச்சயதார்த்தத்தை செய்து முடித்தார்கள். அதில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
திருமணம் நடந்து முடிந்தது: நிச்சயதார்த்தத்துக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டார்கள். அதிலும் குடும்பத்தினரும், உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். அதனையடுத்து ஹைதராபாத்தில் வைத்து ரிசப்ஷனையும் நடத்தினார்கள். அதில்தான் திரைத்துறையை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். தொடர்ந்து தங்களது குட்டி ரசிகை ஒருவரை வீட்டுக்கு வரவழைத்து தடல்புடலாக விருந்தும் வைத்தது ஜோடி. இந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு ஹனிமூனுக்கு பறந்து சென்றார்கள்.
கர்ப்பமாக இருக்கிறாரா?: தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அவர்கள் பறந்ததாக சொல்லப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க சில நாட்களுக்கு முன்பு ராஷ்மிகா வெளியிட்டிருந்த ஒரு பதிவில் நாங்கள் மூன்று பேர் ஆகப்போகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்று சந்தேகங்கள் வலுத்தன. விரைவில் அதுகுறித்து முறையான அறிவிப்பை இந்த புது ஜோடி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று ராஷ்மிகா தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சொத்து மதிப்பு எவ்வளவு?: திருமணத்துக்கு பின் வரும் முதல் பிறந்தநாள் என்பதால்; விதவிதமான பரிசுகளை தனது மனைவிக்கு கொடுத்து அசத்தினாராம் விஜய் தேவரகொண்டா. சூழல் இப்படி இருக்க ராஷ்மிகாவின் முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு படத்துக்கு பத்து கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்குகிறாராம் அவர். மொத்தம் அவருக்கு 100 கோடி ரூபாய் வரை சொத்து இருக்குமாம். ஹைதராபாத், மும்பை, கூர்க் ஆகிய ஊர்களில் சொகுசு பங்களாக்களும் இருக்கின்றனவாம். தான் சம்பாதிக்கும் பணத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்து அதன் மூலமாகவும் வருமானத்தை பெருக்குகிறாராம்.


Click it and Unblock the Notifications















