மொழிகளை அவமதித்ததுபோல் ஆகிவிடும்.. அதான் அப்படி.. ராஷ்மிகா சொன்ன காரணம் தெரியுமா?

பெங்களூர்: ராஷ்மிகா மந்தனா இப்போது பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அனிமல் திரைப்படம் வெளியானது. படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் ராஷ்மிகாவுக்கு ஹிந்தியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். புஷ்பா 2 படத்திலிருந்து நேற்று வெளியான இரண்டாவது சிங்கிளில் ராஷ்மிகாவின் நடனம் வெகுவாக ரசிக்கப்பட்டது.

கன்னட சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கு சினிமா பலத்த வரவேற்பை கொடுத்தது. விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் அவரது நடிப்பும், அழகும் ரசிகர்களையும், திரைத்துறையினரையும் கவர அடுத்தடுத்து ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் அசுர வேகத்தில் வளர்ந்தார்.

Rashmika Mandanna Pushpa 2 2

புஷ்பா: தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனாவுக்கு புஷ்பா திரைப்படம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி மெகா ஹிட்டானதால் ராஷ்மிகா மந்தனாவுக்கு மேலும் புகழ் வெளிச்சம் கிடைத்தது. அதேபோல் அந்தப் படத்தில் அவர் ஆடிய நடனமும் பெரும் வரவேற்பை பெற்றது.

நேஷனல் கிரஷ்: புஷ்பா படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ் என்ற பெயரை பெற்றார். அவரது எக்ஸ்பிரஷென்கள் பயங்கர க்யூட்டாக இருக்கிறது என்று ரசிகர்கள் சிலாகிக்க ஆரம்பித்தனர். சூழல் இப்படி இருக்க தமிழில் சுல்தான் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. விஜய்யுடன் நடித்த வாரிசு படமும் தோல்வியை சந்தித்ததால் கோலிவுட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருக்கிறார்.

அனிமல்: தமிழில் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டாலும் ஹிந்தியில் வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் அவர் கடைசியாக ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் நடித்திருந்தார்.. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அந்தப் படம் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. அதிலும் ராஷ்மிகாவின் நடிப்பும், கிளாமரும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது என்றே சொல்லலாம். அதன் காரணமாக அவர் சம்பளத்தை உயர்த்திவிட்டதாகவும் ஒரு தகவல் சிறகடிக்கிறது.

அடுத்தடுத்த படங்கள்: அனிமல் படம் அவருக்கு கொடுத்த ரெஸ்பான்ஸை அடுத்து ஹிந்தியில் இன்னொரு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ராஷ்மிகா. அதுமட்டுமின்றி தமிழிலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வேறு சில படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிகிறது. இதற்கிடையே புஷ்பா 2 படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

ராஷ்மிகா ட்வீட்: நேற்று புஷ்பா 2 படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வெளியானது. அதில் ராஷ்மிகாவின் நடனம் வெகுவாக ரசிக்கப்பட்டது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில், ஆங்கிலத்தில் பேசினால் எல்லோருக்கும் புரியும் ராஷ்மிகா என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், 'ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கிறேன். ஆனால் நான் அவர்களது மொழியில் பேசவில்லை என்றால் மொழியை அவமானப்படுத்திவிட்டதாக நினைப்பார்கள். அல்லது மொழியே தெரியாமல் நடித்தேன் என்று விமர்சிப்பார்கள். அதனால்தான் ஆங்கிலத்தில் பேசாமல் அந்தந்த மொழிகளில் நடிக்கும்போது அதே மொழியில் பேசுகிறேன்' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X