ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம்.. ஜோடியாக உதய்பூரில் இறங்கிட்டாங்க.. இனி கொண்டாட்டம்தான்
சென்னை: ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் ஜரூராக ஆரம்பித்துவிட்டன. இத்தனை நாட்கள் தங்கள் திருமணம் குறித்து எதுவும் பேசாமல் இருந்த இருவரும்; இன்று காலை அதனை அதிகாரப்பூர்வமாக உறுதியும் செய்துவிட்டார்கள். அதை பார்த்த இரண்டு பேரின் ரசிகர்களும் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.
ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலிக்க தொடங்கியதை அடுத்து அவர்களுக்கு வீட்டிலிருந்தும் சம்மதம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வருடத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சிம்ப்பிளாக முடிந்த நிச்சயதார்த்ததை அடுத்து பிப்ரவரி 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வட்டமடித்தன. அவர்களது திருமணம் தொடர்பான அழைப்பிதழும் சோஷியல் மீடியாவில் லீக்காகி சென்சேஷன் ஆனது.

பத்திரிகையில் எழுதியிருந்தது: அந்த அழைப்பிதழில் விஜய் தேவரகொண்டா, ""எங்கள் வாழ்க்கையில் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். எங்கள் குடும்பங்களின் ஆசீர்வாதங்களுடன் நானும், ராஷ்மிகாவும் 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் இந்த நேரத்தில் எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருடனும் இந்த மகிழ்ச்சியை கொண்டாடி இனிய நினைவுகளை உருவாக்க விரும்புகிறோம். உங்கள் வருகையும், ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மகிச்சியையும், அர்த்தத்தையும் கொடுக்கும்" என விஜய் தேவரகொண்டா எழுதியிருந்தார். ஆனால் அது அதிகாரப்பூர்வமானதுதானா என்ற சந்தேகம் எழுந்தது.
உறுதி செய்த ராஷ்மிகா: ஏனெனில் திருமண பத்திரிகை லீக்கானாலும் மணமக்கள் அதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காமல் இருந்தார்கள். இந்நிலையில் ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று, "நாங்கள் எந்த திட்டத்தையும் போடுவதற்கு முன்பே; எதையும் தேர்வு செய்வதற்கு முன்பே நீங்கள் ஏற்கனவே எங்களுடன் இருந்தீர்கள். அளவற்ற அன்புடன் எங்களுக்கு நீங்கள் ஒரு பெயரையும் கொடுத்தீர்கள். எங்களை VIROSH என்றும் அழைத்தீர்கள். அதனால் இன்று நிறைந்த மனதுடன் உங்கள் அன்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக; நாங்கள் இணைவதை ஒரு பெயரில் அழைக்க விரும்புகிறோம்.
அத்தனை பேருக்கும் நன்றி: அது 'VIROSH திருமணம்'. எங்கள் இரண்டு பேரையும் இவ்வளவு அன்புடன் தாங்கி நிற்கும் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. நீங்கள் எப்போதும் எங்களின் ஒரு பகுதியாகவே இருப்பீர்கள்" என கூறி உறுதி செய்திருந்தார். அவரது போஸ்ட்டை விஜய் தேவரகொண்டாவும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்தார். ஒருவழியாக திருமணத்தை இரண்டு பேரும் உறுதி செய்ததால் இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
உதய்பூரில் ஜோடி: இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் தத்தமது குடும்பத்தினருடன் ஜோடியாக உதய்பூருக்கு சென்றடைந்தார்கள். விமான நிலையத்தில் அவர்களை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதுதொடர்பான வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. நாளை ஹல்தி, நாளை மறுதினம் மெஹந்தி, 26ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது.


Click it and Unblock the Notifications















