Rashmika Mandanna: ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ரிசப்ஷன்.. அடடே புது மாப்பிள்ளையும் பொண்ணும் கலக்குறாங்களே
ஹைதராபாத்: ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு மிகவும் நெருங்கிய வட்டத்தினர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இப்படி இருக்கையில் மார்ச் 4ஆம் தேதி இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டாமாக தொடங்கி உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடைபெற்றது. இந்தியாவின் நெம்பர் 1 பணக்காரரான அம்பானி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதேபோல் திருமணத்தில் கலந்து கொள்ளும் எவரும் திருமணத்தின் போதோ திருமணக் கொண்டாட்டங்களின் போதோ மொபைல் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

அதேபோல் இவர்களின் திருமண ஆடைகள் மற்றும் நகைகளுக்காக மொத்தம் 3 கிலோ தங்கம் உருக்கப்பட்டு நகைகளாகவும் ஆடைகளில் டிசைன்களாகவும் செய்தனர். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல் தம்பதியர் நாடு முழுவதும் ரசிகர்களுக்கு கோவில்களில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தனர். இனிப்புகளும் வழங்கினர்.
ரசிகர்கள் ரியாக்ஷன்: அதேபோல் இவர்களின் திருமணப் புகைப்படங்களை இவர்கள் பகிர்ந்ததும் ரசிகர்கள் அதை தங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சி போல கொண்டாடினர். பலரும் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வாழ்த்தினர். ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக மாறியது. குறிப்பாக 27.7 மில்லியன் ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.
பெரும் வரவேற்பு: இது உலகக் கோப்பையை வென்ற பின்னர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலகக் கோப்பையை முத்தமிட்டதுபடியாக பகிர்ந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக் செய்ததை விட அதிகம். அதேபோல் திருமணத்திற்கு முன்னர் ராஷ்மிகா மந்தனாவை இன்ஸ்டாகிராமில் 50 மில்லியனுக்கும் குறைவான ரசிகர்களே பின் தொடர்ந்து வந்தனர். ஆனால் திருமண புகைப்படங்களைப் பகிர்ந்த பின்னர் ராஷ்மிகா மந்தனாவின் தற்போதைய ஃபாளோவர்ஸ்கள் எண்ணிக்கையானது, கிட்டத்தட்ட 51 மில்லியன்களை நெருங்கிவிட்டது.



Click it and Unblock the Notifications











