ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவுக்கு இரண்டாவது முறை நடந்த திருமணம்.. கண்கள் கலங்கிய ஜோடி

உதய்பூர்: ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக காதலித்துவந்தார்கள். அவர்களது காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். அதன்படி இன்று காலை 10.15 மணிக்கு ராஷ்மிகாவின் கழுத்தில் விஜய் தாலி கட்டினார். குடும்பத்தினர் அவர்களுக்கு நிறைந்த மனதுடன் ஆசீர்வாதம் வழங்கி வாழ்த்தினார்கள். இந்நிலையில் அவர்களுக்கு இரண்டாவது முறையாக திருமணம் நடந்திருக்கிறது.

நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தபோது அவரை காதலித்தார். இரண்டு பேரும் நீண்ட வருடங்களாக டேட்டிங் செய்துவந்தார்கள். ஒருகட்டத்துக்கு மேல் திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்தார்கள். அவர்களின் முடிவுக்கு இரண்டு பேரின் வீட்டிலிருந்தும் உடனடியாக க்ரீன் சிக்னல் கிடைத்தது. எனவே கடந்த வருடம் சிம்ப்பிளாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்கள்.

Rashmika Mandanna Vijay Deverakonda Wedding Couple Marries Again in Udaipur Kodava Traditions
Photo Credit:

துரிதமாக தொடங்கிய ஏற்பாடுகள்: நிச்சயதார்த்தம் செய்ததை அடுத்து திருமண தேதி குறிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 26 என முடிவு செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருக்கும் ஐடிசி மெமண்டோஸ் மாளிகையில் திருமணம் நடத்த திட்டமிட்டார்கள். அதற்கான ஏற்பாடுகள் தொடங்கியதை அடுத்து சில நாட்களுக்கு முன்னதாகவே அவர்களும், குடும்பத்தினரும் அங்கே சென்று சேர்ந்தார்கள். அங்கு சென்றதிலிருந்து ஒரே கொண்டாட்டம்தான். டின்னர், நீச்சல் குள பார்ட்டி, கிரிக்கெட் போட்டி, மெஹந்தி, ஹல்தி, சங்கீத் என களைகட்டியது. சங்கீத் நிகழ்ச்சியில் இரண்டு பேரின் அம்மாக்களின் சூப்பர் நடனம் ஆடினார்கள். அது விழாவில் மேற்கொண்டு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கூட்டியது.

Also Read
ராஷ்மிகா மந்தனா திருமணம்.. காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டிக்கு என்ன கோபம்?.. இப்படி அசிங்கப்படுத்திட்டாரே
ராஷ்மிகா மந்தனா திருமணம்.. காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டிக்கு என்ன கோபம்?.. இப்படி அசிங்கப்படுத்திட்டாரே

நடந்து முடிந்த திருமணம்: அந்தக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும் முடிந்ததை அடுத்து இன்று இரண்டு பேருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. காலை 10.15 மணிக்கு ராஷ்மிகாவின் கழுத்தில் விஜய் தேவரகொண்டா தாலி கட்டினார். அப்போது, ஐந்து வருடத்துக்கும் மேலான தங்களது காதல் உறவு; அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்ததை நினைத்து இரண்டு பேருமே ஆனந்த கண்ணீர் வடித்தார்கள். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் பரிபூரண மனதோடு அவர்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்கி வாழ்த்தவும் செய்தார்கள்.

இரண்டாவது முறை திருமணம்: இந்நிலையில் அவர்களுக்கு உதய்பூரில் வைத்து இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஒருமுறை திருமணம் நடந்தது. ராஷ்மிகா மந்தனா கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியை சேர்ந்தவர். அந்த பகுதிகளில் கொடவா மரபுகள்படி திருமணம் நடப்பது வழக்கம். எனவே அதை மதிக்கும் வகையில் தற்போது திருமணம் நடந்திருக்கிறது. காலை நடந்த திருமணம் விஜய் தேவரகொண்டாவின் கலாசாரத்தையும், மரபுகளையும் மதிக்கும் வகையில் தெலுங்கு முறைப்படி நடந்தது குறிப்பிடத்தக்கது. காலை மற்றும் மாலையில் நடந்த திருமணங்களில் திரையுலக பிரபலங்கள் குறைவான அளவிலேயே கலந்துகொண்டதாக தெரிகிறது.

மார்ச் நான்காம் தேதி ரிசப்ஷன்: மார்ச் நான்காம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் அவர்களது ரிசப்ஷன் நடக்கவிருக்கிறது. அதில் பாலிவுட், டோலிவுட், கோலிவுட்டிலிருந்து எக்கச்சக்க பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். அந்த ரிசப்ஷனுக்காக பல கோடி ரூபாயை செலவழித்திருக்கிறார்களாம். இவை அனைத்தையும் முடித்துக்கொண்டு சினிமா, சோஷியல் மீடியாவிலிருந்து பிரேக் எடுத்து; பல நாடுகளில் ஹனிமூனுக்கு பிளான் செய்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X