பன்றி கறி விருந்தா?.. ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமண மெனுவை பார்த்தீங்களா?.. வெயிட்டான லிஸ்ட்
சென்னை: ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் கடந்த சில வருடங்களாக காதலித்துவந்தார்கள். அதனையடுத்து தங்கள் காதலை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல முடிவு செய்து; அவர்கள் நேற்று உதய்பூரில் திருமணம் செய்துகொண்டார்கள். இதில் குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். மார்ச் நான்காம் தேதி நடக்கும் ரிசப்ஷனில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். இந்நிலையில் அவர்களது திருமணத்தில் போடப்பட்ட சாப்பாடு மெனு லிஸ்ட் தெரியவந்திருக்கிறது.
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். காலையில் தெலுங்கு முறைப்படியும், மாலையில் கொடவா முறைப்படியும் இரண்டு முறை நடந்தது அவர்களது திருமணம். ராஷ்மிகாவின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு விஜய் தேவரகொண்டா ராஜா போல் குதிரையில் வந்தெல்லாம் அசத்தினார். நீண்ட நாள் காதலர் தனது கழுத்தில் தாலி கட்டும்போது நேஷனல் க்ரஷ் ஆனந்த கண்ணீரெல்லாம் வடித்தார்.

மார்ச் நான்காம் தேதி ரிசப்ஷன்: இத்திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. மாறாக அவர்கள் அனைவரும் மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவிருக்கும் திருமண வரவேற்பில் கலந்துகொள்கிறார்கள். சினிமா செலிபிரிட்டிகள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும் வரவிருக்கிறார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் ரிசப்ஷனுக்கான அழைப்பிதழை கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரிசப்ஷனுக்காக பல கோடி ரூபாயை செலவழித்திருக்கிறார்களாம்.
விருந்து லிஸ்ட்: இந்நிலையில் இவர்களது திருமணத்தில் பரிமாறப்பட்ட விருந்து உணவு குறித்த லிஸ்ட் வெளியாகியிருக்கிறது. அதன்படி, 'தெலங்கானா மட்டன் பிரியாணி, ஹைதராபாத் தம் பிரியாணி, பன்றி கறி, நாட்டுக்கொழி குழம்பு, புளி ரசம், கர்நாடகா பிசிபலே பாத், மைசூ பாக்' ஆகிய உணவுகள் திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பரிமாறப்பட்டிருக்கிறது. பொதுவாக குடகு பகுதிகளில் பன்றி கறிக்கு எப்போதுமே தனி டிமாண்ட் இருக்கும். அந்தப் பகுதி மக்களின் உணவுமுறையில் நிச்சயம் அது இருக்கும். ராஷ்மிகாவுக்கும் அந்த உணவு ரொம்பவே பிடிக்கும். எனவே ராஷ்மிகா சார்ந்திருக்கும் குடகு கலாசாரத்தை மதிக்கும் வகையில் பன்றி கறி விருந்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ராஷ்மிகா திருமணத்தின் மெனு லிஸ்ட் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இரண்டு பேரின் பதிவு: முன்னதாக திருமணத்தை முடித்த கையோடு ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் உச்சபட்ச காதலோடு இன்ஸ்டாவில் போஸ்ட்டுகளை போட்டிருந்தார்கள். நேஷனல் க்ரஷ் போட்டிருந்த போஸ்ட்டில், "நான் எப்படிப்பட்ட பெண்ணாக இருக்க வேண்டுமென கனா கண்டேனோ அப்படி மாறியிருக்கிறேன். அதற்கு முழு காரணம் விஜய் தேவரகொண்டாதான். உண்மையிலேயே நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். உன் மேல் எனக்கு இருக்கு காதலை விவரிக்க வார்த்தை போதாது. உனக்கு மனைவியாகிவிட்டேன் என்பதை நினைக்கும்போது ஏகப்பட்ட சந்தோஷம். இனி நாம் வாழ்க்கையில் கொண்டாட்டம்தான். இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த வாழ்க்கையை வாழ்வோம். ஐ லவ் யூ" என உருகியிருந்தார்.
விஜய் தேவரகொண்டாவின் பதிவு: அதேபோல் விஜய் தேவரகொண்டாவும், "உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவளுடன் இருந்தால் சொந்த வீட்டில் இருக்கிறோம் என்கிற பாதுகாப்பான உணர்வு கிடைக்கும். அதனால்தான் எனது பெஸ்ட் ஃப்ரெண்டையே என்னுடைய மனைவியாக்கிக்கொண்டேன்" என நீண்ட போஸ்ட்டை வெளியிட்டு தனது திருமணம் பற்றி தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications















