Rashmika: பாரம்பரிய வேலைபாடுகளுடன் உருவான ராஷ்மிகாவின் திருமண புடவை.. விலை என்ன தெரியுமா?

சென்னை: பிரபல நட்சத்திரங்களான ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமணம் உதய்பூரில் பிப்ரவரி 26ந் தேதி நடைபெற்றது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த திருமணத்தால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ராஷ்மிகா தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். திருமணத்தில் ராஷ்மிகா அணிந்து இருந்த சேலையை மற்றும் மேக்கப்பின் விலை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தருணங்களில் ஒன்றாக இவர்களது திருமணம் அமைந்தது. ரஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் பாரம்பரிய தென்னிந்திய உடையில் இருந்தனர். சில சமூக வலைத்தில் இவர்களின் போட்டோவை பார்த்தவர்கள் புராணக் காதல் கதைகளில் வரும் சிவன்-பார்வதி போன்ற தெய்வீகத் தம்பதியினராக இருப்பதாக புகழ்ந்தனர்.

Rashmika mandanna Vijay Deverakonda wedding cost
Photo Credit:

புடவையின் விலை: அனைவரின் கவனமும் ரஷ்மிகாவின் அலங்காரத்தின் மீது பதிந்தது. அவரது அரச தோற்றத்தின் மொத்த செலவு எவ்வளவு என ரசிகர்கள் வியந்தனர். 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்ட அறிக்கையின்படி, ரஷ்மிகா தனது தென்னிந்திய திருமணத்திற்காக அணிந்த கனத்த ஜரி வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடம்பரமான இந்த ஆரஞ்சு நிற சேலையின் விலை ₹5 லட்சத்திற்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த சேலையில், நுணுக்கமான எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளுடன் ஜொலித்தது. அதற்கேற்ப பின்புறம் திறந்த பிளவுஸ் இணைக்கப்பட்டிருந்தது. இந்த பிளவுஸில் நுணுக்கமான ஜரி மற்றும் சீக்வின் வேலைப்பாடுகள் நிறைந்திருந்தன, இது அனாமிகா கன்னாவின் பாரம்பரிய மற்றும் நவீன வேலைபாடாகும். மேலும், தனது தலைமுடியை நடுவகிடெடுத்து திறந்துவிட்டு, மெல்லிய மேக்கப், நியூட் லிப்ஸ்டிக் மற்றும் எளிய காதணிகளுடன் எளிமையாக இருந்தார்.

மேக்கப்பின் செலவு: அதே போல திருமண நாளில் அணிந்த நகைகளின் மதிப்பு, அதன் எடை மற்றும் கைவேலைப்பாட்டைப் பொறுத்து ₹2 லட்சம் முதல் ₹5.5 லட்சத்திற்கு மேல் இருக்கலாம். ஆக்சஸரீஸ் மற்றும் மலர் அணிகலன்கள் அனைத்தையும் சேர்த்தால், ரஷ்மிகா திருமண மேக்கப்பின் மொத்த செலவு ₹8 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் திருமண செலவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உண்மையான அன்பு: இதனிடையே ரஷ்மிகா மந்தனா, தங்களின் திருமண போட்டோவை பகிர்ந்து தனது காதல் கணவருக்காக நெகிழ்ச்சியான நீண்டதொரு குறிப்பையும் எழுதியிருந்தார். அதில், எனது கணவர் விஜய் தேவரகொண்டாவை இப்போழுது உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். உண்மையான அன்பு என்றால் என்ன என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் இவர்தான். நிம்மதியாக இருப்பது என்றால் என்ன என்பதை எனக்குக் காட்டியவர் இவர்தான். உங்களுக்கான எனது உணர்வுகளை விவரிக்க என்னிடம் எப்பொழுதும் வார்த்தைகள் குறைவு விஜ்ஜு. உங்கள் மனைவியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் மனைவி என்று அழைக்கப்படுவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X