‘புஷ்பா‘வில் நடிக்க மறுத்த சமந்தா.. அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேரும் ராஷ்மிகா !

ஹைதராபாத் : அல்லு அர்ஜுனுடன் முதன்முறையாக ஜோடி சேருகிறார் ராஷ்மிகா மந்தனா .

Recommended Video

Ayyappanum Koshiyum director Sachy Hospitalized | Cardiac Arrest

ரங்கஸ்தலம் என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் சுகுமாறன் அதற்கு அடுத்து தற்போது இயக்கியுள்ள படம் புஷ்பா.

ராஷ்மிகாவிற்கு முன் புஷ்பா படக்குழுவினர், ரங்கஸ்தலம் படத்தில் நடித்த ஒரு உச்ச நட்சத்திர நடிகையை அணுகினார்களாம் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

பிஸியாக நடித்து

பிஸியாக நடித்து

சமீபத்தில் பீஷ்மா மற்றும் சரிலெரு நீகெவ்வரு என்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

வெற்றியைத் தொடர்ந்து

வெற்றியைத் தொடர்ந்து

சில நாட்களுக்கு முன்பு வெளியான செய்தி ஒன்றில் அல்லு அர்ஜுன் அலா வைகுண்டபுரம்லோ வெற்றியைத் தொடர்ந்து தற்போது புஷ்பா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படத்தை ராம் சரண் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படமான ரங்கஸ்தலம் படத்தை இயக்கிய இயக்குனர் சுகுமாறன் இந்த படத்தை இயக்க உள்ளார்.

அதிகாரப்பூர்வ தகவல்கள்

அதிகாரப்பூர்வ தகவல்கள்

இதில் அல்லு அர்ஜுன் புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் லாரி ஓட்டுனராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முதல்முறை இணைவதால்

முதல்முறை இணைவதால்

இதுவரை ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனும் எந்த ஒரு படத்திலும் இதுவரை ஜோடி சேராமல் இருந்த நிலையில் தற்போது புஷ்பா படத்தில் முதல்முறை இணைவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ரஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்தாலும் படக்குழு முதன் முதலில் ஹீரோயினாக நடிக்க அணுகியது நடிகை சமந்தாவை தானாம்.

இடைவெளி வேண்டும்

இடைவெளி வேண்டும்

ஏற்கனவே ரங்கஸ்தலம் படத்தில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் சமந்தா நடித்திருப்பதால் புஷ்பா படத்திலும் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்த படக்குழு சமந்தாவை அணுகியுள்ளனர் ஆனால் சமந்தாவோ ஏற்கனவே நான் இரண்டு படங்களில் கமிட்டாகி விட்டேன் எனக்கு அடுத்த படம் நடிக்க சிறிது இடைவெளி வேண்டும் என இந்த வாய்ப்பை தட்டி கழித்திருக்கிறார்.

காத்துவாக்குல இரண்டு காதல்

காத்துவாக்குல இரண்டு காதல்

சமந்தா ஏற்கனவே தமிழில் சூப்பர் ஹிட்டான 96 திரைப்படத்தை தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்திலும், கேம் ஓவர் படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் புஷ்பா படத்திற்காக இயக்குனர் சுகுமாறன் அணுகியபோது எனக்கு அடுத்த படத்தில் நடிக்க சிறிது இடைவெளி வேண்டும் என சொல்லிவிட்டாராம்.

தேடுதல் வேட்டையில்

தேடுதல் வேட்டையில்

இதனால் தீவிரமான ஹீரோயின் தேடுதல் வேட்டையில் இருந்த இந்த படக்குழு சமீபத்தில் சரிலெரு நீகெவ்வரு மற்றும் பீஷ்மா என இரண்டு வெற்றிப் படங்களை தொடர்ந்து கொடுத்த ராஷ்மிகா அணுகியுள்ளனர் அவரும் கதையை கேட்டுவிட்டு ஓகே சொல்லிவிட்டாராம்.

விஜய் 65

விஜய் 65

மேலும் ரஷ்மிகா மந்தனா புஷ்பா படத்தை தொடர்ந்து தற்போது தமிழில் கார்த்தி உடன் நடித்து வரும் சுல்தான் படத்திலும் மற்றும் விஜய்யின் 65 வது படமான இன்னும் பெயரிடப்படாத ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ள படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X