திருமணம் முடிந்த கையோடு விருது.. கமலிடம் ஆசீர்வாதம்.. நெகிழ்ந்துபோன புது பொண்ணு ராஷ்மிகா மந்தனா
ஹைதராபாத்: இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவை சில வருடங்களாக காதலித்து வந்தார். அவர்களது காதலுக்கு சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த மாதம் உதய்பூரில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் கோலாகலமாக ரிசப்ஷன் நடந்தது. ரிசப்ஷனில் திரையுலகத்திலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு புது அத்தியாயத்தை தொடங்கியிருக்கும் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவையும் வாழ்த்தினார்கள்.
கன்னட திரையுலகத்தில் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கு திரையுலகம் ஏகபோக வரவேற்பை கிடைத்தது. தொடர்ந்து அவரை இயக்குநர்கள் படங்களில் புக் செய்தார்கள். அந்த வகையில் கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தில் அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் இருந்த கெமிஸ்ட்ரி பட்டையை கிளப்பியது. அட ரியல் ஜோடி போன்றே ஸ்க்ரீனிலும் இருக்கிறார்களே அவர்களை கொண்டாடினார்க்ள் ரசிகர்கள்.

விஜய் தேவரகொண்டாவுடன் காதல்: தொடர்ந்து தெலுங்கில் ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்த அவர்; ஹிந்தியிலும் காலடி எடுத்து வைத்தார். அங்கேயும் பலமான வரவேற்பு கிடைக்க; நேஷனல் க்ரஷ்ஷாக மாறினார் ராஷ்மிகா. இதற்கிடையே கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது விஜய் தேவரகொண்டாவுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இரண்டு பேரும் உச்சக்கட்ட ரகசியமாக தங்களது ரிலேஷன்ஷிப்பை வைத்திருந்தார்கள்.
உதய்பூரில் திருமணம்: ஒருகட்டத்தில் அவர்களது காதல் கதை கொஞ்சம் கொஞ்சமாக லீக்காக ஆரம்பித்தது. இரண்டு பேரின் வீட்டிலும் இந்தக் காதலுக்கு சம்மதமும் கிடைத்தது. அதனையடுத்து கடந்த வருடத்தில் சிம்ப்பிளாக நிச்சயதார்த்தம் செய்துகொண்ட அவர்கள்; கடந்த மாதம் உதய்பூரில் வைத்து பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு ஹைதராபாத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் ரிசப்ஷன் நடந்தது. அதில் ஏராளமான திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
ராஷ்மிகாவின் நெகிழ்ச்சி பதிவு: சூழல் இப்படி இருக்க தெலங்கானா மாநில விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். விருது பெறுவதற்கு முன்பு அவர்களிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கினார். அதுதொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. தான் விருது பெற்றது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில், "நான் சிறு வயதாக இருந்தபோது யாராவது ஒரு மாநில அளவிலான விருதை வென்றால் அவர்களை சூப்பர் ஸ்டார்களாக பார்த்தேன். அவர்கள் எப்படி இதை சாதித்தார்கள், தினமும் என்ன செய்வார்கள் என நினைத்து ஆச்சரியப்படுவேன்.
சிறப்பான தருணம்: நேற்று மாலை நான் மாநில அளவிலான விருது பெற்றது சிறப்பான தருணமாக இருந்தது. அந்த உணர்வுகளை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை. நான் நீண்ட தூரம் வந்துவிட்டதாக உணர்கிறேன். பெருமையும், மகிழ்ச்சியும், திருப்தியும் கலந்த ஒரு உணர்வு இருக்கிறது. இந்த ஆண்டு இவ்வளவு அழகாக தொடங்கியிருக்கிறது. அதிலும் தெலுங்கானா மாநில விருதுடன் என்னை வரவேற்றதற்கு நன்றி. தி கேர்ள் ஃப்ரெண்ட் படத்தை அழகாக உருவாக்கிய இயக்குநர் ராகுலுக்கு நன்றி" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications















