வைரலான ராஷ்மிகாவின் வொர்க் அவுட் வீடியோ... பிட்னஸ் ரகசியம் இதுதானா?

ஐதராபாத் : நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள புஷ்பா படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே கொடுத்துள்ளது.

Recommended Video

வைரலான ராஷ்மிகாவின் வொர்க் அவுட் வீடியோ... பிட்னஸ் ரகசியம் இதுதானா?

கீதா கோவிந்தம் படம் ராஷ்மிகாவிற்கு சிறப்பாக கைக்கொடுத்த படம்.

தமிழிலும் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகையாக மாறியுள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவருக்கு இந்தியிலும் படவாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இதையடுத்து மும்பையிலும் வீடு வாங்கி குடியேறியுள்ளார். சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் இவர் ஜோடி சேர்ந்திருந்த புஷ்பா படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

சிறப்பான புஷ்பா படம்

சிறப்பான புஷ்பா படம்

இந்தப் படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் கிராமத்து பெண்ணின் லுக்கை கொண்டு வந்திருந்தார். இவரது நடிப்பு மற்றும் நடனம் இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளது. இதையடுத்து இவருக்கு தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சுல்தான் படத்தின் நாயகி

சுல்தான் படத்தின் நாயகி

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளார். தமிழிலும் இந்தப் படம் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. தற்போது புஷ்பா படமும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழில் நேரடியாக கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்திருந்தார்.

விஜய்யை திருமணம் செய்ய ஆசை

விஜய்யை திருமணம் செய்ய ஆசை

சமீபத்தில் தன்னுடைய திருமணம் குறித்த பேட்டியில் நடிகர் விஜய்யை மணமுடிக்க தான் விரும்புவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். விஜய் மீது தனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் தன்னை பாதுகாப்பாக வைத்திருக்கும் நபரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

வொர்க்அவுட் வீடியோ பகிர்வு

வொர்க்அவுட் வீடியோ பகிர்வு

சமூக வலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வரும் ராஷ்மிகா தொடர்ந்து பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. மிகவும் வெறித்தனமாக தனது வொர்க் அவுட்டை அவர் செய்கிறார். அவரது அழகின் ரகசியம் இதுதானோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X