கூடவே இருந்து நம்பிக்கை துரோகம்..80 லட்சத்தை ஏமாற்றிய மேனேஜர்.. அதிர்ச்சியில் ராஷ்மிகா!

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேஜேனர் அவரிடம் இருந்து ரூ.80 லட்சம் மோசடி செய்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.

Rashmika Mandannas manager cheated of Rs 80 lakh

இவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி என பல மொழிகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ராஷ்மிகா: கிரிக் பாரட்டி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ராஷ்மிகா, அதன் பின் 2017 ல் அஞ்சலி புத்ரா, சமக் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் பேமஸ் நடிகையாக மாறினார் ராஷ்மிகா. அந்த படத்தில் நடித்த போது இருவரும் காதலித்ததாகவும் இருவரும் அவ்வப்போது டேட்டிங் சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Rashmika Mandannas manager cheated of Rs 80 lakh

வாரிசு படத்தில்: அதனை தொடர்ந்து 2021 ல் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் தமிழில் தளபதிக்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். அல்லு அர்ஜூடன் இவர் ஜோடிபோட்டு நடித்த புஷ்பா திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. அந்த படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்திருந்தார். தற்போது உருவாகி வரும் புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் பிஸி: கன்னடம், தெலுங்கில் கலக்கி வந்த ராஷ்மிகா தற்போது பாலிவுட் நடிகையாகவே மாறிவிட்டார். அமிதாப் பச்சனுடன் இணைந்து குட்பை என்ற படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, ரன்பீர் கபூர் உடன் அனிமல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 11ந் தேதி வெளியாக உள்ளது.

Rashmika Mandannas manager cheated of Rs 80 lakh

80 லட்சம் மோசடி: இந்நிலையில், நீண்ட நாட்களாக ராஷ்மிகாவின் மேனேஜராக இருந்த நபரை நடிகை ராஷ்மிகா அதிரடியாக நீக்கி உள்ளார். அவர் தன்னிடம் சுமார் 80 லட்சம் ரூபாயை மோசடி செய்தது தெரியவந்ததால் ராஷ்மிகா இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளார். அந்த நபர் ராஷ்மிகா, சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து அவருக்கு மேனேஜராக பணியாற்றி வந்தவராம், கூடவே இருந்து மேனேஜர் துரோகம் செய்ததால் ராஷ்மிகா கவலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X