The Girlfriend Box Office: ராஷ்மிகாவோட நடிப்பெல்லாம் சூப்பர் தான்.. ஆனால், தி கேர்ள் ஃபிரெண்ட் வசூல்?
ஹைதராபாத்: ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல் நடிப்பில் நவம்பர் 7ம் தேதி வெளியான தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா லீடு ரோலில் நடித்த படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங் வந்ததா? என்றா? இல்லை என்றே பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பாலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா இந்த ஆண்டு சல்மான் கான், விக்கி கவுஷல், ஆயுஷ்மான் குரானா என பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்த படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய ஓபனிங் வசூலை ஈட்டின.

ஆனால், உமன் சென்ட்ரிக் படமான தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படம் மூலம் நயன்தாரா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் போல வசூல் வேட்டை செய்வாரா ராஷ்மிகா என எதிர்பார்த்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்கின்றனர்.
ராஷ்மிகா மந்தனா நடிப்பு சூப்பர்: ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா பூமா தேவி எனும் கதாபாத்திரத்தில் தீக்ஷித் ஷெட்டியின் கேர்ள் ஃபிரெண்டாக நடித்துள்ளார். பெண்களை ஏமாற்றும் ஆண்களின் கதையாகவும் வீறு கொண்டு எழும் பெண்ணாகவும் ராஷ்மிகா மந்தனா நடித்து மாஸ் காட்டியுள்ளார். படத்தை பார்த்த பலரும் ராஷ்மிகாவின் தலை சிறந்த நடிப்பு என்றும் டோலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே தரமான படம் என்றும் ராஷ்மிகாவுக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கொண்டாடி வருகின்றனர்.
முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?: 1000 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை நடத்திய படங்களில் எல்லாம் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ள படம் குறைந்த பட்சம் முதல் நாளில் பெரிய ஓபனிங்கை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திரையிட்ட இடத்தில் எல்லாம் கூட்டமே இல்லாமல், ஒட்டுமொத்தமாக முதல் நாளில் வெறும் 1.3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது.
வீக்கெண்ட் பிக்கப் ஆகும்: ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள் ஃபிரெண்ட் படத்துக்கு மவுத் டாக் நல்லா இருக்கும் நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் சற்றே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், படத்தின் பட்ஜெட் அளவுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டையை படம் அள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











