பீலிங்ஸ் பாடலை தூக்கி சாப்பிடும் ராஷ்மிகாவின் ஓவர் பீலிங்ஸ் சாங்.. ’நதியே’ பாடல் எப்படி இருக்கு?
சென்னை: சமந்தாவுடன் இணைந்து மாஸ்கோவின் காவேரி படத்தில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் தீக்ஷித் ஷெட்டி இணைந்து நடிக்கும் "தி கேர்ள்ஃபிரண்ட்" திரைப்படத்தின் 'நதியே' பாடல் பான் இந்தியா பாடலாக பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது.
கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகி வருகிறது இந்த தி கேர்ள்ஃபிரெண்ட் படம். புகழ்பெற்ற தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தினை வழங்குகிறார். பாடகி சின்மயின் கணவரான நடிகர் ராகுல் ரவீந்திரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

முழுமையான காதல் படைப்பாக உருவாகி வரும் இப்படத்திலிருந்து முதல் இசை வெளியீடாக "நதியே" எனும் பாடல் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
ராஷ்மிகா மந்தனாவின் நதியே பாடல்: புஷ்பா 2 படத்தில் வந்துச்சே பீலிங்ஸ் என ராஷ்மிகா மந்தனா தர லோக்கலாக அல்லு அர்ஜுன் உடன் இணைந்து போட்ட ரொமாண்டிக் குத்தாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ள இந்த பாடல், மனதைக் கொள்ளை கொள்ளும் இசையும், ஈர்க்கும் குரலும் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாக உள்ளது. தமிழ் பாடல் வரிகளைக் கவிஞர் ராகேந்து மௌலி எழுதியுள்ளார். அவருடைய வரிகள், இசையுடன் நெருக்கமாக இணைந்து, காதல் உணர்வுகளை அட்டகாசமாக கொண்டு வந்து முன்னிருத்தியிருக்கிறார்.
சர்ச்சைகளுக்கு மத்தியில் சாதனை: சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா பேசிய பேச்சுக்கு கர்நாடகாவில் சில எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. சர்ச்சைகள் ஒரு பக்கம் தன்னை சுற்றி வந்துக் கொண்டிருந்தாலும், குபேரா படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த அடுத்த சாதனைகளை திரையில் படைக்கும் முயற்சியில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா டோலிவுட் நடிகர் தீக்ஷித் ஷெட்டி உடன் இணைந்து செம கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் செய்துள்ள பாடலாக இந்த நதியே பாடல் உருவாகியிருக்கிறது.
இளைஞர்களை இமிடியேட்டாக கவரும்: ஒரே ஒரு கண்ணாடி அறைக்குள் ஹீரோவும் ஹீரோயினும் வித்தியாசமான ஸ்டெப்களை போட்டு செம ரொமாண்டிக்காக ஆடும் இந்த பாடலை விஸ்வகிரண் நம்பி கொரியோகிராப் செய்திருக்கிறார். நேர்த்தியான நடன அசைவுகள், ராஷ்மிகாவின் அழகான முகபாவங்கள் மற்றும் தீக்ஷித்தின் அழகான நடிப்பு ஆகியவை இளைஞர்களை கவரும் வகையில் உள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் "தி கேர்ள்ஃபிரண்ட்" திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு அடுத்து ஒரு ரொமாண்டிக் ஹிட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











