rashmika : எக்கச்சக்க காதலுடன் ராஷ்மிகா.. விஜய் தேவரகொண்டாவுடன் எப்படி எல்லாம் வாழ ஆசைப்படுகிறார் தெரியுமா?

ஹைதராபாத்:தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகையான ரஷ்மிகா மந்தனா, தனது சமீபத்திய கருத்துகளால் சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஒருமுறை புயலைக் கிளப்பியுள்ளார். விஜய் தேவரகொண்டாவுடனான உறவு மற்றும் திருமணம் குறித்த வதந்திகள் பற்றி வழக்கம்போல் அமைதி காத்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்திய "திருமணம் குறித்த ராஷ்மிகாவின் கருத்து" தற்போது பேசுபொருளாகியுள்ளது.

ரசிகர்கள், திரையுலக வட்டாரங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ரஷ்மிகாவின் இந்தக் கருத்துகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஜகபதி பாபு தொகுத்து வழங்கும் "ஜயம்ஞ்சு நிஷ்சயம் அம்பு ரா" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஷ்மிகாவிடம், "திருமணம் என்றால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" என்று ஜகபதி பாபு கேட்டார்.

இதற்கு ரஷ்மிகா அளித்த பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. "நீயே என் சூரியன், நீயே என் சந்திரன் என்று சொல்லும் நாட்கள் போய்விட்டன. இப்போது திருமணம் என்பது இருவர் ஒருவராகும் ஒரு பயணம். ஆனால், அந்த 'ஒருவராகும்' பயணத்தில் ஒருவருக்கு ஒருவர் அழுத்தம் கொடுக்கக் கூடாது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, மதித்து, அன்புடன் பயணிக்கும்போதே உண்மையான திருமணம் சாத்தியமாகும்" என்று அவர் குறிப்பிட்டார்.

Rashmika Mandhana s Views On Marriage Spark Controversy

மேலும், "திருமணம் என்பது வெறும் மோதிரங்களை மாற்றிக்கொள்வது மட்டுமல்ல. இருவருக்கும் இடையே பரஸ்பர மரியாதை, பாசம், நம்பிக்கை இருக்க வேண்டும்.ஒருவருக்கு ஒருவர் தனிப்பட்ட இடத்தை வழங்க வேண்டும். அன்புடனும், நட்புடனும், புரிதலுடனும் மட்டுமே இருவரும் ஒருவராக முடியும்" என்று அவர் சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். இந்தக் கருத்துக்கள் ரசிகர்களை சிந்திக்கத் தூண்டின.

பாராட்டு: அவர் பேசியதும் அரங்கில் கைதட்டல்கள் நிறைந்தன. ஏனெனில், பொதுவாக சினிமா துறையில் உள்ள நடிகைகள் இத்தகைய ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்துவது அரிது. ரஷ்மிகாவின் இந்த வார்த்தைகள் அவரது ஆளுமையையும், சிந்தனை முதிர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன. இதற்கு முன்னர் ஒரு நேர்காணலில், தனது வாழ்க்கைத்துணை குறித்து ரஷ்மிகா பேசியிருந்தார். "உலகமே எனக்கு எதிராக இருந்தாலும், எனக்காக நிற்கும் ஒருவரே எனக்கு வேண்டும். என்னை ஆழமாகப் புரிந்துகொண்டு, என் உணர்வுகளை மதிக்கும் ஒருவர் வேண்டும். எனக்காகப் போராடக்கூடியவராக இருந்தால், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வேன்" என்று அவர் கூறியிருந்தார். இந்த கருத்துக்களைக் கேட்ட ரசிகர்கள், "இது வெளிப்படையாக விஜய் தேவரகொண்டாவைப் பற்றியதுதானே!" என்று சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

Rashmika Mandhana s Views On Marriage Spark Controversy

தேவர கொண்டாவுடன் காதல்: சமீபகாலமாக, ரஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அக்டோபர் 3-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக பேசப்பட்டாலும், அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், ஒரு நேர்காணலில் ரஷ்மிகா மறைமுகமாக, "நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவே உண்மை... நேரம் வரும்போது சொல்வேன்" என்று கூறியது அந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்தது. மொத்தத்தில், ரஷ்மிகா மந்தனா கூறிய "திருமணம் பற்றிய பார்வை" தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வரவேற்பு: அவர் வெளிப்படுத்திய சிந்தனைமிக்க வார்த்தைகள் இளைஞர்களைக் கவர்ந்துள்ளன. அன்பு என்பது மரியாதை, திருமணம் என்பது சமத்துவம், இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதுதான் உண்மையான உறவு என்பதை ரஷ்மிகா தனது வார்த்தைகளால் நிரூபித்துள்ளார். தற்போது இந்த கருத்துக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

More from Filmibeat

Read more about: india entertainment
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X