Rashmika Mandhanna: இவருதான் என்னோட காதலர்.. ஓபனான பேசிய ராஷ்மிகா மந்தனா!
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ், ஹிந்தி என நாளுக்கு நாள் தனது மார்க்கெட்டினை அதிகரித்துக் கொண்டே செல்லும் நடிகை என்றால் அது ராஷ்மிகா மந்தனாவைச் சொல்லலாம். இவரது சினிமா கிராஃப் கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்த வண்ணம் உள்ளது. தென்னிந்திய சினிமாக்களைப் பொறுத்தவரையில், கதாநாயகனாக இருப்பதைக் காட்டிலும் கதாநாயகியாக நீடிப்பதில் இருக்கும் சவால்கள் ரொம்பவே அதிகம்.
அந்த வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனா போட்டி நிறைந்த சினிமா உலகில் தன்னை உச்சத்தில் நிறுத்தியுள்ளார் என்றால் அதற்கான முயற்சிகளும் சவால்களும் நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

சினிமா உலகிற்குள் வந்துவிட்டாலே அவர்களை கிசுகிசுக்கள் சூழ்வது என்பது சாதாரண விஷயம்தான். அதிலும், நடிகை என்றால் அவ்வளவுதான், எங்கிருந்தான் கிசுகிசுக்கள் உருவாகின்றது எனக் கண்டு பிடிக்கவே முடியாது எனக் கூறுவதைப்போல், டன் கணக்கில் கிசுகிசுக்கள் உருவாகிவிடும். அந்த வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவத் தொடங்கியது.

ஆனால் இதனை இருவருமே மறுத்து வந்தார்கள். இருவருமே நாங்கள் நல்ல நண்பர்கள் எனக் கூறி வந்தார்கள். ஆனால் கடந்த தீபாவளியை ராஷ்மிகா மந்தானா விஜய் தேவரகொண்டா வீட்டில் கொண்டாடியதாக தெலுங்கு ஊடகங்களில் தகவல்கள் வேகமாகப் பரவியது. இதுமட்டும் இல்லாமல், ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்களும் அதனை உறுதி செய்வதைப்போல் இருந்தது.

கிசுகிசு: இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் இணைந்து, டேட்டிங் சென்றுள்ளனர். இந்த டேட்டிங்கின்போது விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவை எடுத்த புகைப்படத்தினை ராஷ்மிகா ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். ஆனால் இந்தப் புகைப்படத்தினை விஜய் தேவரகொண்டாதான் எடுத்தார் எனக் குறிப்பிடவில்லை. இதனால் அந்தப் புகைப்படத்தினை விஜய் தேவரகொண்டாதான் எடுத்தார் என யாருக்கும் தெரியவில்லை.

டேட்டிங்: இந்நிலையில் கடந்த சில தினங்களாக இணையத்தில் வேகமாக ஒரு புகைப்படம் பரவி வருகின்றது. அதாவது ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த புகைப்படத்தில் அணிந்திருந்த உடையில் விஜய் தேவர கொண்டாவுடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது.

விஜய் தேவரகொண்டா: இந்நிலையில் நேற்று அதாவது நவம்பர் 24ஆம் தேதி சென்னையில் புஷ்பா 2 படத்தின் ப்ரோமோசன் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா பேசுகையில், விஜய் தேவரகொண்ட குறித்து மறைமுகமாக பேசினார். அதாவது, நீங்கள் யாரையாவது காதலிக்கின்றீர்களா? உங்களுக்கு மாப்பிள்ளை திரைத்துறையில் இருந்து வரவேண்டுமா? இல்லை திரைத்துறை அல்லாதவராக இருக்கவேண்டுமா? எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர்," இந்தக் கேள்விக்கு பதில் அனைவருக்கும் தெரிந்ததே" எனத் தெரிவித்தார். இவரது பதிலைக் கேட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். புஷ்பா 2 வரும் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.



Click it and Unblock the Notifications











