தளபதி 64: ஆசையாக காத்திருந்து, ஏமாந்து போன நடிகை
சென்னை: ரஷ்மிகா மந்தனாவின் ஆசை நிறைவேறுவது போன்று இருந்த நிலையில் அது நடக்காது என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.
கன்னட படமான கிரிக் பார்ட்டி மூலம் நடிகையானவர் கர்நாடகாவை சேர்ந்த ரஷ்மிகா மந்தனா. அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ரஷ்மிகா.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மூலம் கோலிவுட்டுக்கும் வந்துவிட்டார் ரஷ்மிகா. கோலிவுட் வந்த கையோடு அவருக்கு தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளது.
பிகில் படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் தளபதி 64 படத்தில் அவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக கூறப்பட்டது. இந்த செய்தி காத்து வாக்கில் ரஷ்மிகாவின் காதிலும் விழுந்தது.
இது குறித்து அவர் கூறியதாவது,
நான் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேனா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். எனக்கும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க ஆசையாகத் தான் உள்ளது. அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார்.
தளபதி 64 படத்தில் ரஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பாலிவுட்டில் பிசியாக இருக்கும் கியாரா விஜய் படத்திற்காக டேட்ஸ் அட்ஜஸ்ட் செய்வதாக தெரிவித்துள்ளார்.
கியாரா பாலிவுட் தவிர தெலுங்கு திரையுலகிலும் பிரபலமான நடிகையாக உள்ளார். அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் கியாராவுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அப்படி என்றால் ரஷ்மிகாவின் கனவு தற்போதைக்கு நிறைவேறாது போன்று.


Click it and Unblock the Notifications











