Rashmika mandanna: புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மந்தனா சம்பளம்.. என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க!

மும்பை: புஷ்பா 2 படம் மூலம் மீண்டும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் மாஸ் காட்டி வருகின்றன. பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கியுள்ள குபேரா படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

புஷ்பா 2 படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை, ஐதராபாத், கொச்சி என அடுத்தடுத்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மும்பையிலும் இந்தப் படத்தின் பிரமோஷன் களைகட்டியது.

allu arjun rashmika mandanna pushpa 2 movie


புஷ்பா 2 படம்: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ஸ்ரீலீலா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது புஷ்பா 2 படம். முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பையும் 500 கோடி அளவிலான வசூலையும் பெற்ற நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாகம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. படத்தில் அல்லு -அர்ஜுன் -இயக்குநர் சுகுமார் ஜோடி மீண்டும் மாஸாக அமைந்துள்ளது. படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இதனிடையே படக்குழுவினரும் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அல்லு அர்ஜுன் -ராஷ்மிகா டான்ஸ்: ஐதராபாத், பாட்னா, சென்னை, கொச்சி என அடுத்தடுத்த இடங்களில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மும்பையில் படத்தின் ப்ரீ ரிலீஸ்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் கலக்கலாக பங்கேற்றனர். மிகவும் கவர்ச்சியான உடையில் ராஷ்மிகாவை பார்க்க முடிந்தது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நேற்றைய தினமும் இந்த ஜோடி கலக்கலாக மற்றும் சுவாரஸ்யமாக ரசிகர்களிடையே பேசினர். மேலும் நிகழ்ச்சியின் ஹைலைட்டலாக மேடையில் இவர்களின் டான்ஸ் அமைந்திருந்தது.


சம்பளம் குறித்து ராஷ்மிகா: இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா மந்தனாவிடம் புஷ்பா 2 படத்தில் அவரது சம்பளம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. புஷ்பா 2 படத்திற்கு பிறகு ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் அதிகமாக சம்பளம் வாங்குவதாக கூறப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா, இதை தான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் அதில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார். முன்னதாக புஷ்பா படத்திற்கு ராஷ்மிகா 2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்தப் படம் அவரை நேஷனல் கிரஷ்ஷாக மாற்றியுள்ளது. இதையடுத்து தற்போது அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ள புஷ்பா 2 படத்திற்கு 10 கோடி ரூபாய் வரையில் அவர் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காத்திருக்கும் ரசிகர்கள்: டிசம்பர் 5ம்தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள புஷ்பா தி ரூல் படம் சர்வதேச அளவில் 12,000 திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புஷ்பா படம் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான நிலையில் சர்வதேச அளவில் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தை தமிழ் படத்தை போலவே கொண்டாடினார்கள். தமிழில் இந்தப் படம் மிகப்பெரிய வசூலை பெற்றிருந்தது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள புஷ்பா 2 படமும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்த நிலையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்து நிகழ்ச்சி முடியும்வரையில் இருந்ததை பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X