இனி யாராவது கார்த்தி ஹீரோயினை பார்த்து சம்பளம் பத்தி கேட்பாங்க!!

By Siva

பெங்களூர்: சம்பள உயர்வு குறித்து நடிகை ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கன்னட நடிகையான ரஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் படம் மூலம் பிரபலமானார். அவர் விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள டியர் காம்ரேட் படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் டியர் காம்ரேட் பட விளம்பர நிகழ்ச்சிகளில் விஜய்யும், ரஷ்மிகாவும் கலந்து கொண்டு வருகின்றனர்.

ரஷ்மிகா

ரஷ்மிகா

ரஷ்மிகா தெலுங்கு திரையுலகின் வேகமாக வளரும் நடிகையாக உள்ளார். மேலும் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார் ரஷ்மிகா. அவர் தனது வளர்ச்சியை மனதில் வைத்துக் கொண்டு சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அது சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை.

பணம்

பணம்

வளரவே இல்லை அதற்குள் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்துவதா என்று ரஷ்மிகாவை திரையுலகினர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் ரஷ்மிகா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவரிடம் சம்பள உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தெளிவான பதில் அளித்துள்ளார்.

முன்னேற்றம்

முன்னேற்றம்

நான் நடிக்க வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் வளர்ச்சி அடையும்போது சம்பளத்தை உயர்த்துவது நியாயம் தானே. நீங்கள் ப்ரொமோஷன் மற்றும் ஊதிய உயர்வு கேட்க மாட்டீர்களா?. நானும் அப்படித் தான் என்று செய்தியாளரை பார்த்து தெரிவித்தார் ரஷ்மிகா மந்தனா. அதன் பிறகு யாரும் அவரிடம் சம்பளம் பற்றி எதுவும் கேட்கவில்லை.

லட்சங்கள்

லட்சங்கள்

ஒரு படத்தில் நடிக்க ரூ. 40 லட்சம் வாங்கி வந்தார் ரஷ்மிகா. அவரின் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதையடுத்து ரூ. 60 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை கேட்கிறார். அவர் தற்போது நடித்து வரும் கன்னட படத்திற்கு ரூ. 64 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளாராம். இதன் மூலம் கன்னட திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் சேர்ந்துள்ளார் ரஷ்மிகா மந்தனா. இந்நிலையில் தான் அவர் கேட்கும் சம்பளம் டூ டூ மச்சாக உள்ளது என்று குமுறுகிறார்கள் கன்னட திரையுலகினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X